Thursday 10 August 2017

பனம்பொருள்.


மதிப்பிற்குரியவர்களோடு!
பனை வளங்களின் உற்பத்திப்பொருட்களை அதிகப்படுத்துவதன்மூலம் நெகிழிப் பொருட்களின் பாவனையை மட்டுப்படுத்துவதில் தொடங்கி முற்றாக தவிர்த்துக்கொள்வதுவரையான முயற்சியின் முதற்படியாக பனம்பொருள் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்துமுகமாகவும் பனை வளங்களை அதியுச்ச பாவனைக்குட்படுத்துவதற்காகவும்
இவ்வருட அனலைதீவு ஐயனார்கோவில் திருவழாவிற்கான 500 அர்ச்சனைப்பெட்டிகளை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொள்வனவுசெய்து அவர்களின் உழைப்பினைக் கௌரவப்படுத்தி சுற்றுச் சூழலையும் இயற்கையையும் போற்றும்படியான முன்மாதிரியை நடைமுறைப்படுத்த முனைந்திருக்கிறோம்.
பனைவளங்களால் பயன்பெறவேண்டிய நிலையிலுள்ள பனம்பொருள் உற்பத்தியாளர்களிடமிருந்து 500 அர்ச்சனைப் பெட்டிகளை ஊக்குவிப்புத் தொகையுடனான விலைக்கு வாங்கி அவற்றை அனலைதீவு மாதர் சங்க நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம். இவற்றை சந்தை விலைக்கு விற்றுவரும் பணத்தை அனலைதீவு மாதர் சங்க நிர்வாகத்தினர் பனம்பொருள் உற்பத்தி வளர்ச்சிக்காக மீண்டும் மீணடும் பயன்படுத்துவார்கள்.

அனலைதீவு ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் இந்தவருட திருவிழாவின்போது நெகிழிப் பொருட்களை தவிர்த்து ஊரிலுள்ள பனம்பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் தங்களாலான நிர்வாக ரீதியான நடைமுறைகளை அமுல்படுத்தியதற்காக நமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்வோம்.
இம்முயற்சியில் பங்காற்றி ஒத்துழைப்பு வழங்கிய அனலைதீவு மாதர் சங்கத்தினர் மற்றும் திரு.த.கோகுலராஜ் ஆகியோருக்கு எமது நன்றிகள். இம்முன்மாதிரியை செயற்படுத்த ஆதரவு வழங்கிய மதிப்பிற்குரிய ஊற்காவற்துறை பிரதேச செயலர்மற்றும் கிராம அலுவலர் ஆகியோருக்கும் ஊர் மக்கள் சார்பாக நன்றிகள்.
ஊரிலுள்ள பனம்பொருள் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.





No comments:

Post a Comment