Sunday, 11 March 2012

திசை.


நம் ஊரின்
வெளிச்சக்கூட்டின்
நிழல்
ஒரு திசையில்
கடலுக்குள் விழுந்து
வீணாய்க் கரைகிறது.

உச்சியில் விளக்கேற்றினால்
எத்தனையோ படகுகள்
கரைசேர உதவும்.

வாருங்கள்
எதிர்காலச் சூரியர்களை
கைவிளக்கைப் பிடித்தபடி
தேடுவோம்.
               மு.குசிவம்.

No comments:

Post a Comment