Sunday 17 June 2012

அறநெறிப் பாடசாலை.


     அனலைதீவு அறநெறிப் பாடசாலையானது  தனது மிக முக்கியமான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும்  தேவைகளுக்கும் மத்தியிலும் நம்மெல்லோரினதும் தார்மீகக்கடமையென எண்ணி  May 17.2012 ம் திகதி கிளிநொச்சி, வட்டக்கச்சி  பொது நூலகத்திற்கு 106000.00 ரூபா பெறுமதியான 317 புத்தகங்களை கையளித்திருந்தது.
                 June15.2012 ம் திகதி     மேற்குறிப்பிட்ட நூல்நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அனலைதீவு அறநெறிப் பாடசாலையினால் கொடுக்கப்பட்ட புத்தகங்கள் தனிநபர் பங்களிப்பில்லை என்பதோடு இம்முயற்சி முற்றுமுழுதாக ஊரவர்களனைவரினதும் கூட்டுமுயற்சி என்பதைத்
தெரிவிக்குமுகமாக எமது இக்குறிப்பை இங்கு பதிவுசெய்கிறோம்.
     வன்னிப்பிரதேச மக்களின் கல்வியின் முன்னேற்றத்திற்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் மனமுவந்து உதவவேண்டியது அதிமுக்கியமான தார்மீகப்பொறுப்பென நாம் நம்புகிறோம்.
அறநெறிப்பாடசாலை சார்பாக
திரு.மார்க்கண்டு கரிகரன்.
June 16.2012.

No comments:

Post a Comment