Sunday, 15 July 2012

நேசிப்புக்குரியவர்களே! வணக்கம்!
நீண்ட கால யுத்தம் சப்பித்துப்பிய பிரதேசங்கள் எல்லாவற்றைப் போலவும் நமது கிராமத்தின் கல்வியும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன,மத,மொழி அடிப்படையிலான வாதப்பிரதிவாதங்களுக்கப்பால் கல்விவளர்ச்சியின் முக்கியத்துவத்தையும், அதன்பாலுள்ள சமூக அடிப்படை முன்னேற்றத்திற்கான திண்மையையும் புரிந்து கொள்வது ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு வழியமைக்கும். இன்றைய எமது முக்கியமான குறிக்கோளாக நாம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முயற்சிப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றகரமான மாற்றத்தை அவர்களுக்குத் தேவையான இன்றைய தருணத்தில் ஏற்படுத்துவதாகும். சமூக அக்கறையுள்ள கல்வி ஆர்வலர்கள் அனைவரும் ஆத்மார்த்தமாக எமது பணியில் இணைவதன்மூலம் நமது மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு நமது நேசத்திற்குரிய பிறந்த மண்ணையும் கெளரவப்படுத்துவோம்.
பலஆண்டுகள் கல்வியில் பின்தங்கியுள்ள நமது கிராமத்து மாணவர்களின் கல்விவளர்ச்சியில் நம்மாலான பங்களிப்பைச் செய்வதற்கானமுன்முயற்சியாக 2011ம்ஆண்டு June மாதத்திலிருந்து மாலைநேர பிரித்தியேக வகுப்புகளும் 2011ம்ஆண்டு November மாதத்திலிருந்து கணணி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.
ஆசிரியர்களின் பிரயாண அசெளகரியங்களினால் ஏற்படுகின்ற நேர இழப்புகளை நிவர்த்திப்பதற்கான இச்சிறிய முயற்சியினை இப்போது ஆரம்பித்தமைக்கு அசாதாரண சூழலற்ற கனிவான காலத்தின் பிரசன்னம் முக்கிய காரணமாகும்.
இதுவரையான எமது செயல்வடிவங்களை
www.mass7-lk.blogspot.ca Facebook: Analaitivu araneri ஆகிய தளங்களில் பார்வையிடலாம். Email : ma7araneri@gmail.com
கேட்டுக் கொடுப்பது திருப்தி! தேடிக் கொடுப்பது மட்டுமே தர்மம்!
அறநெறிப்பாடசாலை சார்பாக திரு.த.நாராயணன். July 8.2012

No comments:

Post a Comment