Sunday 30 June 2013

எழட்டும்.






      வரட்சியின் ஆட்சிக்குட்பட்டும் சில நம்பிக்கைத் தளிர்களோடு நிமிர்ந்து நிற்கவே பழகிப்போன இந்த மரங்கள் வெய்யில் விழுங்கிப் பச்சையம் போர்த்தன.
            விட்ட மூச்சை திரும்பப் பெறமுடியாத தருணம் வரை மனிதன் மரங்களை நினைக்க மறுக்கிறான். அல்லது மறக்கிறான்.எழில்மிக்க நமது தேசத்தின் அழகையும் நமது எதிர்காலச் சந்ததியையும் ஆரோக்கியமாகப் பேணுவதற்கு மரங்கள் நடுவது நமது தலையாய கடமையாகிறது.
            தேச பக்தியும் தெய்வ பக்தியும் ஒன்றுதான் என்று சொல்வார்கள். தூரத்திலிருந்தாலும் இங்கிருந்து நாம் தூவக்கூடியது ஒரு  இதழாயினும் அது ஒரு மரமாக நம் மண்ணில் வாசமாய் விழட்டும். சுவாசமாய் எழட்டும்.
அறநெறிப் பாடசாலை. June 30.2013.







No comments:

Post a Comment