ஆழமான மனதுக்குள்
இன்னமும்
அறுபத்தியேழு
உயிர்களோடு
மிதக்கும்
இந்தக்கடல்.
அடிவயிற்றில்
அலைமோதிக் கடலும்
மனமுடைந்து
மணலாகிக் கரையும்
இன்னும் அழுதபடிதான்.
கரும்பாறை இடுக்கோடு
மறைந்தோரின் உயிர் வாசம்.
கரையோடு அலைவந்து
கண்ணீரால் தினம் பேசும்.
அறுபத்தியேழு முத்துக்கள்
மூர்ச்சையானது
இந்த
ஆழிச்சிப்பிக்குள்ளேதான்.
காலச்சிற்பி கோர்த்தெடுத்து
அமைதிக்குத்தான் அணிந்திருப்பான்.
இனி
தான் வார்த்தெடுத்த அனலைக்கு
கடலம்மா
பணிந்திருப்பாள்
இக்கரைக்கும் அக்கரைக்கும்
துறைமுகங்கள் இல்லாமல்
உயிர்ப்படகு அணைந்ததெல்லாம்
கடல்மடியின் இறைமுகங்கள்.
-- சிவம்.
October 06.2013.
No comments:
Post a Comment