நமதினியோருக்கு!
அனலைதீவு மனோன்மணி அம்பாள் அறநெறிப் பாடசாலையானது
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, பதிவுசெய்யப்பட்ட
அமைப்பாகும்.
தனிநபர்கள் எவரையும் சார்ந்ததல்ல.
ஊர்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகத்தால்
நிர்வகிக்கப்படும் அமைப்பாகும்.
கல்வியில் அக்கறையுள்ள, நல்ல வழிகளில் தர்மம் செய்ய
எண்ணமுள்ள
அன்பு நெஞ்சங்களின் ஜீவிதமான உதவிகளோடு கல்விப்பணியைத்
தொடருகிறோம்.
அறநெறியின் வளர்ச்சியில் பங்குகொள்ளும் அத்தனை
அன்புநெஞ்சங்களும் அறநெறியின் பொறுப்பாளர்களாவர்.
எமது நிர்வாகத்தின் செயற்பாடுகளில் அக்கறைகொண்டு
விமர்சிப்பவர்களும் தமது விமர்சனப்பணியைச் செய்வதின்மூலம் அறநெறியின்
பொறுப்பாளிகளில் ஒருவராகவே கருதப்படமுடியும்.
எல்லாவிதமான விமர்சனங்களும்
விமர்சனங்களுக்குட்பட்டவையே.
இன்றைய சமூகமும் இன்றைய தொடர்பாடல் வளர்ச்சியும்
கருத்துக்களையும் விமர்சனங்களையும்விட சொல்பவரின்
செயல்வடிவத்தையும் அவர்களின் வார்த்தைக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியின் அளவையும்
துல்லியமாக எடைபோட வாய்ப்பளிக்கிறது.
இங்கிருந்துதான் நம்பகத்தன்மை ஆரோக்கிமானதாக
வேர்விடமுடியும்.
வளமான விமர்சனங்களும் அனாமதேயங்களாக நீர்த்துப்
பயனற்றுப்போவது நமது எல்லோரினதும் வளர்முகத்தின் தடைகளேயென்பதால் எமது எளிமையான
கருத்தை பணிவன்போடு நம்மவர்களின் கவனத்திற்கு உட்படுத்துகிறோம்.
தன்னையும், தனது திடமான கருத்தையும் நம்புகிற எவரும் பெயர்சொல்லிப்
பேசுவதற்கோ அன்றி எழுதுவதற்கோ அஞ்சுவதில்லை
எதிர்விமர்சனங்களை எதிர்கொள்ள அஞ்சாத, மனத்தைரியமுள்ள, தாம்
அக்கறைகொண்ட சமூகத்தின் நேர்மையையும்,
பெயர்சொல்லிப்பேசும் அடிப்படை நாகரீகத்தையும் வளர்த்தெடுக்க விரும்புகின்ற, நம்புகின்ற எவரும்
பெயர்சொல்லிப் பேசுவதற்கோ அன்றி எழுதுவதற்கோ அஞ்சுவதில்லை.
புரிதலுக்கான அடித்தளமாக இருக்கின்ற ஒருவருக்கொருவருடனான
நேசிப்பைப் பண்படுத்தி ஒற்றுமையின்பால் நகர்த்துவது மட்டுமே தவறான புரிதல்களைக்
களைந்து வேற்றுமையின்மையை
உருவாக்க ஏதுவாகும்.
மேகங்களைத் தூண்டில்போட்டுப் பிடிக்கமுடியாது.
அவை விளையும் நிலம்பார்த்துப் பொழிந்துகொண்டேயிருக்கின்றன.
அறநெறிப் பாடசாலை.
08.11.2013.
No comments:
Post a Comment