பாய்மரம்.
24 மணி நேர மின்சார சேவையுட்பட எல்லா விதமான
அபிவிருத்திப் பணிகளையும் வரவேற்றுப்
பாராட்டி நன்றி சொல்லும் நாம் குறிப்பாக அனலைதீவின் அதி அத்தியாவசியமான தேவையாக
அனலைதீவு மக்களனைவரும்
கருதும் அம்பியுலன்ஸ் படகு கொள்வனவுக்காக
நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்காக மதிப்புக்குரிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
செயலாளர் நாயகமும், அமைச்சருமான
டக்ள்ஸ் தேவானந்தா
அவர்களுக்கும் மதிப்புக்குரிய ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களுக்கும் அனலைதீவு
கிராம அலுவலர்கள் மதிப்புக்குரிய திரு.வடிவழகையன், திரு.நா.தரிசன் ஆகியோருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும்
சார்பாக எமது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தீவகங்களுக்கான அம்பியுலன்ஸ் படகுத் தேவையின் அவசியத்தையும் கட்டாயத்தையும்
உணர்ந்து பரிந்துரை செய்து பல வழிகளிலும் அக்கறையோடு செயற்பட்ட மதிப்புக்குரிய யாழ்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு. ஆ.கேதீஸ்வரன் அவர்களுக்கும் எமது மனதார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது அத்தியாவசிய தேவையும் எதிர்பார்ப்பும் விரைவில்
நிறைவேறுமென்று நம்புகிறோம்.
அவசியத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
-அனலை சமூகநல
மன்றம்.
Jan 21.2014.
No comments:
Post a Comment