Monday, 20 January 2014

கட்டுமரம்.



கட்டுமரம்.
                     
சமுத்திரத் தொட்டிலில் தவழ்ந்த, தவழுகின்ற அத்தனை அன்பு நெஞ்சங்களுடனும் உரிமையோடு ஒரு பகிர்வு.
                அனலைதீவு அறநெறிப் பாடசாலை நிர்வாகமானது தனது  அனலைதீவு மக்கள் சார்ந்த சமூக நல செயற்பாடுகளை  2014ம் ஆண்டிலிருந்து "அனலை சமூக நல மன்றம்" என்ற புதிய அமைப்பினூடாக செயற்படுத்த  ஆரம்பிக்கிறது.
                அனலைதீவு மாணவர்களுக்கான இலவச வகுப்புகளை தொடர்ந்து நடாத்துவதோடு கல்விசார் உதவிகளை வழங்கவும் ஊரின் முன்னேற்றத்திற்கு அவசிமான பணிகளில் ஈடுபடவும்  முனையும் நாம்  நமது இலங்கைத் திருநாட்டின்  வளமான, அமைதியான எதிர்காலத்திற்கு
அறிவார்ந்த  மாணவ சமூகமே அடித்தளமாக அமையமுடியுமென 
உறுதியாக நம்புகிறோம்.
                சொல்லிக்கொடுக் ஆளில்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை நடாத்த வேண்டிய தேவை பூர்த்தி செய்யப்படவேண்டிய ஒன்றென்பதாலும், பிரித்தியேக வகுப்புகள் மாணவர்களுக்கு பயனுள்ளவையாக துணைபுரியுமென்பதாலும்  நாம் தொடர்ந்து கல்விப்பணியை முன்னெடுக்கிறோம்.
                தேச பக்தியுடன்கூடிய, இனங்களுக்கிடையேயான சமத்துவம் நிறைந்த ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நம்மாலான பங்களிப்பை நாம் நல்கவேண்டும்.                மாணவ சமூகத்தின் வளமான முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகவும், உறுதிப்பாடாகவும் அமையுமென்பது எமது உறுதியான கருதுகோளாகும்.
அனலை சமூகநல மன்றம்.                                         
Jan 20.2014.

No comments:

Post a Comment