பனை படு வாழ்வு நீங்குமா? பனை தளைக்குமா?
-வடபுலத்தான்
தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று பனை.
தமிழ் மக்களின் வாழ்வோடு இணைந்திருந்தது இந்தப் பனை.
நம்
முன்னோரின் உணவில் பனம் பொருட்கள் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன.
எழுதுவதற்குகூட அவர்கள் ஓலைச் சுவடிகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
முக்கியமான ஆவணங்கள், இலக்கியப் படைப்புகள், வரலாற்றுத் தகவல்கள், சோதிடம், அறிவியல் போன்ற எல்லா விடயங்களையும் ஓலைச் சுவடியிலேயே எழுதி வைத்திருந்தார்கள்.
வீடமைப்பதற்குக்கூட பனையே மூலாதாரமாக இருந்திருக்கிறது.
படுப்பதற்கு, நெல் காயவைப்பதற்கு, பந்தி வைப்பதற்கு எல்லாவற்றுக்கும் பாய், புழங்குவதற்கு பெட்டி, அரிசி புடைப்பதற்கும் நெல் தூத்திக் கொள்வதற்கும் குல்லம் (சுளகு) பிட்டு அவிப்பதற்கு நீர்த்துப்பெட்டி எனப் பல வடிவங்களில் பனை ஓலைப்பொருட்கள் இருந்திருக்கின்றன.
ஆகவேதான் நம்முன்னோர்கள் பனையைக் கற்பகதரு என்றும் தாலமூல விருட்சம் என்றும் சொன்னார்கள்.
இந்தப்பனை சுற்றுச்சூழலுக்கும் ஆதரமானதாகும்.
காடு குறைந்த வடக்குக்கிழக்கில் நிழல் தரு விருட்சமாக இருந்தது பனை.
ஆனால் இந்தப்பனையை இன்று நாம் இழந்து வருகிறோம்.
கடந்த காலத்தில் நடந்த யுத்தம் பனையைக்கொள்ளையிட்டது.
யுத்தத்தின் போது பதுங்குகுழிகளை அமைப்பதற்காகப் பெருமளவு பனைகளை படையினரும் போராளிகளும் பயன்படுத்தினார்கள்.
அதாவது லட்சக்கணக்கான பனைகளைத் தறித்து பங்கர்களை அமைத்தார்கள்.
போதாக்குறைக்கு எறிகணைத் தாக்குதலிலும் குண்டு வீச்சுகளிலும் லட்சக்கணக்கான பனைகள் அழிக்கப்பட்டன.
இதைவிட தற்போது அழிக்கப்பட்டு வரும் பனைகளின் எண்ணிக்கையும் அதிர்;ச்சியளிக்கும் வகையில் மிக அதிகமாகவே உள்ளது. காரணம், யுத்தத்தின் பிறகு புதிதாக அதிக அளவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் - கட்டிடங்களின் தேவைக்காக பனைகள் தறிக்கப்படுகின்றன.
இவ்வாறு அழிக்கப்பட்ட பனைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 49 விழுக்காடு என்;று சொல்லப்படுகிறது.
ஆனால், இவ்வாறு அழிவடைந்திருக்கும் பனைகளின் எண்ணிக்கையை ஈடுசெய்யக்கூடியமாதிரி பனை நடுகை மற்றும் பனை மீளுருவாக்கம் நடைபெறவில்லை.
பனை நடுகை நடைபெறுகிறது. ஆனால் இழப்புகளின் அளவுக்கு அதை மீளுருவாக்கம் செய்யப்படுகிறதா என்றால் இல்லை.
அதையும் விட முக்கியமானது, பனையைப்பற்றி, பனை அழிப்பினால் ஏற்படும் பாதகங்களைப்பற்றி, பனை நடுகையின் முக்கியத்துவம் பற்றி போதிய அறிவூட்டல் நம்மிடையே இல்லை.
பனை அபிருத்திச்சபை ஒரு குறிப்பிட்ட எல்லைவரை இதைச்செய்தாலும் இதை ஒரு சமூக மயப்படுத்தப்பட்டதிட்டமாகக்கொள்வதற்கு இன்னும் சாதகமான சூழல் உருவாக்கப்படவில்லை.
ஆனால்,உண்மையில் பனை பற்றிய அறிதல் இன்று சமூகமயமாக்கப்பட வேண்டும்.
புவியியல் ரீதியாகவும் பண்பாட்டியல் ரீதியாகவும் வரலாற்றியல் மற்றும் சமூகவியல் ரீதியாகவும் பனையின் முக்கியத்துவம் உணரப்பட்டு பனை பரவலாக்கம் செய்யப்படவேண்டும்.
பனையோடு இணைந்த வாழ்வும் பனையோடு இணைந்த சூழலும் என தமிழர் வாழ்வு வடிவமைக்கப்படுவது அவசியம்.
தமிழ் அடையாளம், தமிழ்ப் பண்பாடு எனப்பேசும் நாம் அதன் மூலவேராக இருக்கும் பனைகளைக் கைவிடுவது பொருத்தமானது அல்ல.
ஆகவே பனையைப்பற்றிய விழிப்புணர்வைச்செய்ய வேண்டியது கட்டாயமானதாகும்.
முன்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கிய மில்க்வைற் என்ற சவர்க்கார நிறுவனமும் அதனுடைய உரிமையாளரான கனகராஜாவும் பனையின் முக்கியத்துவத்தைப் பற்றி பெரும் பரப்புரை செய்ததை இங்கே நாம் நினைவு கொள்ள வேண்டும்.
அந்தப் பரப்புரையின் விளைவாகப் பனையை நாட்டியவர்கள் அதிகம்.
பனையைத் தறிக்கக் கூடாது என்று கருதியோரும் அதிகம்.
அதுமட்டுமல்ல, கனகராஜா வடக்குக்கிழக்கில் பல இடங்களுக:கும் பனை விதைகளை எடுத்துச்சென்று தானே முன்னின்று அவறறை நாட்டினார்.
இன்று வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் நிற்கின்ற பனைகளில் பெரும்பாலானவற்றில் தெரிவது, கனகராஜாவின் முகமே.
இப்பொழுது அந்த மாதிரியான ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்
.
தற்போது பனை அபிவிருத்திக்குப்பொருத்தமான ஒருவர் தலைவராக நியமனம் பெற்றிருக்கிறார் என்று பலரும் சொல்கின்றனர்.
இவர் அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும்.
இவருக்கு முன்னர் இந்தப்பதவியில் இருந்தவர்களை விட இப்பொழுது இந்தப்பதவியை வகிப்பவருக்கு பெரும் சவால்கள் உண்டு.
எனென்றால், இவருடைய காலத்தில்தான் அதிகளவு பனைகள் நாட்டப்படவேண்டியுள்ளன. பனையைப்பற்றிய விழிப்புணர்வ அதிகமாகச் செய்யவும் வேண்டியுள்ளது.
ஆனாலும் இவருக்கான காலமும் கனிந்தே இருக்கிறது.
கைதடியில் மஞ்சள் நிறத்தில் கம்பீரமாக நிற்கும் பனை அபிவிருத்தி மற்றும் பனை ஆய்வு மையம் இநதப்பணியைச்செய்யவேண்டும்.
இல்லையென்றால், பனையை இழந்த பாழ்வெளியின் அனல்மூச்சை நாமெல்லாம் ஏற்கத்தான் வேணும். கூடவே அடையாளமறற ஒரு நிலவெளியையும் வரலாற்றையும் முகத்தையும் கொண்டோராகி விடுவோம்.
பனைமரக்காடே.... அழகிய பனந்தோப்பே... என்றுரைத்த காலமும் கவிதையும் எங்கே.

No comments:
Post a Comment