ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டி நூல் அறிமுகம்! |
18.06.2014 - புதன்கிழமை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சு வினா விடைகள் அடங்கிய பரீட்சை வழிகாட்டி நூல் ஒன்றை நேற்று அறிமுகஞ் செய்து வைத்தது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க மற்றும் மேலதிகச் செயலாளர் ஹேமந்த பிரேமதிலக ஆகியோரும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அமைச்சரவையினதும் தீர்மானத்துக்கு அமைய இந்த நூல் வெளியிடப்பட்டதாகவும், அரசாங்க வெளியீட்டகத்தினால் தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை 140 ரூபாவுக்கு மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடத்துவதற்கு வசதியாக மாதிரி வினாக்கள் அடங்கிய இறுவெட்டுகளும் நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் விநியோகிக்கப்பட்டன. | http://www.epdpnews.com/ |
No comments:
Post a Comment