Monday, 4 August 2014

மரியாதை!


       நமதூரில் நீண்டகாலம் ஆசிரியையாகக் கடமையாற்றிய  மதிப்புக்குரிய ஆசிரியை செல்வி.சுப்பையா மனோன்மணி அவர்களின் நினைவு நிதியமாக தொண்டர் ஆசிரியர் ஒருவரின் மாதாந்த உதவியை  ஆசிரியை  செல்வி. சுப்பையா மனோன்மணி அவர்களது குடும்பத்தார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர் என்ற மகிழ்வான செய்தியை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் நாம் எமது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 நமதூரின் கல்விவளர்ச்சியில் பங்காற்றி அமரர்களாகிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கான  உண்மையான, நிலையான நினைவுகூரலாக அமையக்கூடியது இவ்வாறான பங்களிப்புத்தான் என்ற கருத்தில் நாம் முழுமையாக ஒன்றுபடுவோ ம் .
அனலை சமூக நல மன்றம்.
August 05.2014.

 
         நன்றி. சதாசிவன்.

No comments:

Post a Comment