Sunday, 7 September 2014

தேர்த்திருவிழா.

 அனலைதீவு (புளியந்தீவு) அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரன் ஆலய தேர்த்திருவிழா. 


புளியந்தீவுறை நாகேஸ்வரனே போற்றி!

அருட்பெரும் ஜோதி வடிவம்
ஆகியே ஒளிரும் வேத நாயகனே போற்றி.
உனதொளி உலகெல்லாம் தெறித்தே
உணர்வூட்டும் பரம்பொருளே போற்றி
கண்களிரண்டும் உனைக் காண்பதற்கே
விழித்துக்கொள்ளுமே நாகேஸ்வரா போற்றி
அறம் பூண்டோரை திகழ வைத்திடும்
இறைவா உனதருள் பொழியட்டுமே போற்றி
உன் திருவடி தவழ்ந்தே எழும்போது
நல்வினைகள் மலர்ந்திடும் தேவனே போற்றி

அடியார் உளம்புகுந்தே நல்வழி
ஈர்க்கும் பரம்பொருளே எங்கள் ஈசனே போற்றி
தீவினைகள் அற்றுக் காக்கும்
புளியந்தீவு நடேசப் பெருமானே போற்றி
நயினை நாகபூசனிக்கே கடல்வழி
மலர் தொடுத்த நாக தம்பிரானே போற்றி
புளியந்தீவில் உறைந்தே அரசாட்சி
புரியும் எங்கள் நாகேஸ்வரனே போற்றி
ஸ்ரீ நாக இராஜேஸ்வரி தாயாருடன்
அமர் நாகேஸ்வர அப்பனே போற்றி போற்றி.       
                                                                                                         . நாராயணன்.         









No comments:

Post a Comment