Sunday, 2 November 2014


மலையிலிருந்து மண்ணுக்குள்…

**மலையிலிருந்து மனிதர் விழுதல்
பரிதாபகரமானது…
மலையே இடிந்து மனிதர் மேல் வீழ்தலானது…?
**வலியுரைக்க வார்த்தைகளில்லை;
**வரைபடத்தில் மட்டும் அவர்கள்
உயரத்தில் இருந்தார்கள்…
வாழ்க்கைத் தரம் என்றுமே
பாதாளம்தான்…!
**எப்பொழுதுமே
சுருங்கிய அவர் வாழ்வை
நொருங்கிய மலை
சூறையாடிவிட்டது…!
**ஈமச் சடங்குகளுக்குக் கூடப்
பணம் இல்லாத
ஏழைகள் அவர்கள்…
அதனால்தானோ,
இலவசமாய்ப் புதைந்து போனார்கள்..!
**அந்தத் தேயிலைச் செடிகளுக்கு
இதுநாள் வரை ஊற்றிய
இரத்தமும் வியர்வையும்
போதாதென்றா இப்பொழுது
உயிர்களையும் புதைத்திருக்கிறார்கள்..?
**இனி..
அருந்தத் தொடங்கும் ஒவ்வொரு
கோப்பைத் தேநீரிலும்
அவர் உயிர் மணக்கத் தொடங்கும்..!
-எஸ். ஹமீத்


http://salasalappu.com/

No comments:

Post a Comment