நமது தாயக பூமியான
இலங்கைத் திருநாட்டின் அறுபத்தியேழாவது தேசிய சுதந்திர தினமான Feb 04.2015ம் திகதி அனலைதீவு இலவச கணணி வகுப்பில் பயிலும் மாணவர்களால்
தேசிய சுதந்திர தினம் மகிழ்வோடு கொண்டாடப்பட்டது.காங்கேசன்துறை முதல் தெய்வேந்திர
முனை வரை நமது தேசத்தின் எல்லைவரை இலங்கையர் அனைவருக்கும் உரிமையுள்ள நமது
தேசத்தை இன, மத, மொழி வேறுபாடுகளை
புறந்தள்ளி நேசிப்பதற்கு கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் முனைவது சுபீட்ஷமான
எதிர்காலத்தை உருவாக்க, புதிய பாதையை அமைக்க உதவும் என்பது நம்மனைவரினதும் நம்பிக்கையாக
அமையட்டும்.
மறக்கமுடியாத தியாகங்களோடு பிணைந்துள்ள வலிகளும், வடுக்களும் நெஞ்சோரமாய் நெருடுகிற நினைவுகளை கடந்து இனிவரும் காலமும், இனிவாழும் சந்ததியும் கண்ணியமான வளமான வாழ்வுபெற நாமனைவரும் நமது
இலங்கைத் திருநாட்டை நேசிப்போம்.
No comments:
Post a Comment