Wednesday, 1 April 2015

அகம் நிறைந்த தாயே.





மாதுளம் பூ நிறத்தழகும் நீயே
நெற்றிக் குங்குமப் பொட்டழகும் நீயே
காதில் வைடூரிய தோடழகும் நீயே
இரத்தினக்கல் மூக்குத்தியழகும் நீயே
உதட்டிலே புண்னகை சிரிப்பழகும் நீயே
மாணிக்க கணையாழி கை விரலழகும் நீயே
பாதக்கமலத்தில் கொலுசொலியழகும் நீயே
மார்பில்முத்தார அணிகலன ழகும் நீயே
பூ மாலை அலங்கார வடிவழகும் நீயே
பஞ்ச தீபாராதனை ஒளியழகும் நீயே
அரவணைத்து கருணை பொழியழகும் நீயே
அடியவர்கள் மலரும் அருள் அழகும் நீயே
அனலையில் உறைந்த தாயழகும் நீயே
எங்கள் மனோன்மணித் தாயே போற்றி
எழுமங்கை நாச்சியரே போற்றி போற்றி.
, நாராயணன்









1 comment:

  1. வணக்கம்
    சொல்லிய விதம் நன்று
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete