பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?
ஞானசக்தி-ஸ்ரீதரன்
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா குரூரமான பாலியல் பலாத்காரப் பலாத்காரப்படுகொலைக்கு யாழ் குடாநாடு மற்றும் வடக்கு கிழக்கில் மக்கள் கொந்தளிப்பும் கோபமுமான உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த
பாலியல் பலாத்கார படுகொலை புரிந்தவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்குவது
–மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு தமது ஆதரைவைத் தெரிவிப்பதும்,
இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் நிகழக் கூடாது என்பதும் இந்த வெகுஜன
நடவடிக்கைகளினூடாக வலியுறுத்தப்படுகின்றன.
நாகரிகமான கண்ணியமான சுதந்திரமமான வாழ்வு தொடர்பான தாக்கமான பிரதிபலிப்புக்களாக அவை வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் தன்னியல்பாக -சுயாதீனமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
இம் மக்களின் எழுச்சிகள் நம்பிக்கை அளிப்பனவாக அமைகின்றன.
இதுபோன்ற கொடுமைகள் இதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன.
இந்த எழுச்சி இவற்றுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கையாக அமையலாம்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாக பாரிய எழுச்சி சமகாலத்தில் இப்போதுதான் முதன் முதலாக நிகழ்கிறது.
இந்த பாலியல் வன்கொடுமை பற்றி வக்கிரமான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள்?? தமிழில் எண்ணுக்கணக்கற்று இருக்கின்றன.
இவை
அன்றாடம் பாலியல் பலாத்காரம் புரிந்து கொண்டிருக்கின்றன. இந்த கிறிமினல்
ஊடகங்கள் தடைசெய்யப்படுவதும் இந்த வக்கிரப்பேர்வழிகள் சட்டத்தின் பிடியில்
கொண்டுவரப்படுவதும் சிரமமானதெனினும் முக்கியமான பணியாகும்.
பாதிப்பட்டவர்களின்
நிழல் படங்களை வக்கிரமாக பிரசுரிப்பது செய்திகளை அதே விதமாக எழுதுவது.
சமூக இணையத்தளங்களில் பரவிவிரும் இந்த விசக்கிருமிகளிடமிருந்து சமூக அற
உணர்வுகள் பாதுகாக்கப்படவேண்டும்.
2013
இல் டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி நிகழ்ந்த
வெகுஜன எழுச்சியில் அந்த மாணவியின் நிழல் படங்கள் ஊடகங்களில்
துஸ்பிரயோகம்செய்யப்படவில்லை.
பாதிக்கபட்ட
மாணவியின் குடும்பத்தினதும் - ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிக்கும்
மக்களின் கண்ணியத்தை காக்கும் விதமாக ஊடக செயற்பாடுகள் அமைய வேண்டும்.
தவிர
இந்த பாலியல் வன்கொடுமைக்கெதிராக மக்களின் எழுச்சியை தமக்கு
சாதகமாகபாவிக்க சமூக விரோத சக்திகள் முயல்வதும்
அவதானிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த வெகுஜன எதிர்ப்பியக்கம்; தொடரவேண்டியிருக்கிறது.
பாலியல்
வன்கொடுமை படுகொலைகள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய
கடப்பாடு மத்திய அரசு -மாகாண அரசு- உள்ள+ராட்சி சபைகள் -பொலிசாருக்கு
இருக்கிறது.
ஒருங்கிணைந்து மக்களின் பாதுகாப்பில் அக்றை செலுத்தி செயற்படவேண்டும்.
பொலிஸ்-பிரசைகள் குழுக்கள் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
பொலிசிலும் பெண்களின் நலன் சார்ந்து தனிப்பிரிவு ஏற்படுத்தப்படவேண்டும்.
பெண்களுக்கு குடும்பத்தில் சழுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய போதிய அறிவும் பயிற்சியும் அவர்களுக்கு இருக்கவேண்டும்.
அவசர தொலைபேசி அழைப்புக்களுக்கான இலக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். அவை 24 மணி நேரசெயற்பட்டில் இருக்க வேண்டும்.
வன்முறை மயப்பட்ட சீரழிந்த பிரிவொன்று சமூகத்தில் உருவாகியிருக்கிறது.
இது வெற்றிடத்தில இருந்து வரவில்லை.
சமூகத்தில்
பயத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரம் மிக்க சக்திகள் வேண்டும் என்று
அரசியல்வாதிகள் அமைச்சர்கள் முதல் பாமரர்கள் வரை பேசுகிறார்கள்.
ஆண்பெண்
சமத்துவம் நிலவும் பெண்களின் சுதந்திரம் பாதுகாப்பு ஓரளவேனும்
உறுதிப்படுத்தப்பட்ட நாடுகளில் அச்சுறுத்துவதற்கென்று அதிகாரசக்திகள்
என்று எவரும் இல்லை.
ஐரோப்பா வடஅமெரிக்க நாடுகளில் இதனை நாம் அவதானிக்கமுடியும்.
நம்மை ஆழ்வதற்கு சமுதாயத்தில் பீதி ஏற்படுத்தும் அதிகார சக்திகள் தேவை என்று கூறுவது ஜனநாயக விரோதமானதாகும்.
இதில் பாசாங்கும் இருக்கிறது.
இடையறாத பண்பாட்டு மறுமலர்ச்சி மற்றும் சமூக மாற்ற இயக்கங்களினாலேயே மாறுதலைக் கொண்டுவரமுடியும்.
பண்பாடு
கலாச்சாரத்தின் பெயரில் வக்கிரமே எமது சமூகத்தில் ஆதிக்கம் புரிகிறது.
இந்த மாணவியின் மீது பாலியல் வன்முறை புரிந்தவர்களின் எண்ணிக்கை
அதிர்ச்சியடையவைக்கிறது. இது இந்த சமூகத்தில் நிலவும் வக்கிரத்திற்கும்
,குரூரத்திற்கும், ஆசாடபூதித்தனத்திற்கும் சான்று.
மாணவி வித்தியாவிற்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும்.
அது எமது சமுதாயத்தில் பெண்களின் சுதந்திரம் பாதுகாப்பிற்குமான திறவுகோலாக அமைய வேண்டும்.
நாடளவிய அளவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் உரிமைகளை மறுதலிக்கும் நுகர்வு பண்டமாக கருதும் போக்கு ஒரு வழமையாகியிருக்கிறது.
எனவே இதன் முக்கியத்துவம் கருதி
பெண்களின்
உரிமைகள் தொடர்பான சட்டங்கள் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து
பிரத்தியேகமாக உருவாக்கப்படவேண்டும். யாப்பு ரீதியாகவும் நடைமுறையிலும்
உறுதிப்படுத்தப்படவேண்டு;ம்
பெண்கள் மீதான வன்முறைகளுக்கெதிரான இயக்கம் இடையறாது முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.
ஞானசக்தி-ஸ்ரீதரன்