Friday, 17 July 2015

இலங்கையில் மனித உறுப்பு வர்த்தகம்: முக்கியப் பிரமுகர்கள் மீது புகார்
இலங்கையில் மனித உறுப்புகளை திருடி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் வலைத்தளம் இயங்குவதும் அதனுடன் ரசகசியமாக சில மருத்துவனைகள் தொடர்பு வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல தனியார் மருத்துவனையும் முன்னாள் இலங்கை அரசின் முக்கிய பிரமுகர் ஒருவரும் தொடர்புடையதும் தெரிய வந்துள்ளது. இலங்கையில் மாத்தளை மற்றும் கண்டியில் செயல்பட்டு வரும் இந்த மனித உறுப்பு வர்த்தக வலைத்தளம் குறித்து உள்நாட்டு செய்திச் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக மனித உடலில் சிறுநீரகத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு விற்றுவருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வறுமையில் உள்ளோரிடம் பணத்தாசை காட்டி அவர்களுக்கு சொற்ப பணத்தை கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தை பெற்று பெரும் லாபத்திற்கு வெளிநாட்டில் விற்றுவருவதாக புகார் எழுந்துள்ளது.
 http://www.thenee.com

No comments:

Post a Comment