இன்னிசைத்
தென்றல் வீசி ஓய்ந்தது.
தமிழின்
தாலாட்டுக் குரல் காற்றில் சாய்ந்தது.
இசைத்துத்
திளைத்த புல்லாங்குழலொன்று
தான் இசைத்த
காற்றுக்குள்ளேயே மூழ்கிப்போனது.
சரித்திரமும், சத்தியமும், தத்துவமும்,
இன்னும் அத்தனை உணர்வுகளும்
இசைக்குள் ஊற்றி
எமக்கெல்லாம்
ஊட்டிவிட்ட மாமேதையின் பொற்கரங்கள்
ஓய்ந்துகொண்டன.
இல்லை. இல்லை.
பூங்காற்றுக்கு
இல்லை உறக்கம்.
இது இசை இமயத்தின்
ஒரு தவநிலை.
இயற்கையிடம்
மனிதனின் முழுநிலை.
காற்றுள்ளவரை
விஸ்வநாதம் மிதக்கும்.
பூமி சுற்றும்வரை
ஜீவநாதம் ஒலிக்கும்.
ஞானம்
இறப்பதில்லை.
புதிதாய்ப்
புதிதாய்த் தோன்றும்.
வற்றாத இராக
நதியே!
நீ நனைத்த நிலமெல்லாம்
நீ நனைத்த நிலமெல்லாம்
உனக்காய்
ஆயிரமாய்ப் பூ
பூக்கும்.
காற்று
உன்னைப்போல் ஒரு
புல்லாங்குழலுக்காய்
யுகம் யுகமாய்க்
காத்திருக்கும்.
-சிவம்.
.
No comments:
Post a Comment