Saturday 22 August 2015

நமது ஊரும் நாமும்.


நமது ஊர் அழகானது.வளமானது.தண்ணீரும், மண்ணும் சேரந்தால் புண்ணிய பூமி.கற்றவர்களையும், பண்பாளர்களையும் ஈன்றெடுத்த தெய்வ பூமி.

கடல்வழிப்பாதையை மட்டும் நம்பியிருக்கின்ற நமது ஊரவர்கள் இடர்நிறைந்த பல வருடங்களை தன்னப்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொண்டவர்கள். அந்த மண்ணைச் சுவாசித்தவர்கள்.
இன்றும் அங்கு வாழ்பவர்கள்.

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பார்க்கும் பத்து நாட்கள் வீதிவலம் வரும் நமது தெய்வங்களை வருடம் முழுவதும் பார்ப்பவர்கள்.

நம் மண்ணின் சிறுவர்கள்,  மாணவர்கள் அந்த மண்ணின் புதையல்கள். பொக்கிசங்கள்.அங்குள்ள ஆசிரிய சமூகம் நம் மண்ணின் வழிகாட்டிகள்.நம்மண்ணிலுள்ள முதியவர்கள் நம்மையெல்லாம் ஆசிர்வதிக்கும்  ஆசிபெற்ற தெய்வங்கள்.

இவர்களெல்லாம்தான் நம் மண்ணின் பெருமையைப் பேசக்கூடிய தார்மீக் பொறுப்புடையவர்கள். நமதூரில் ஆறாம் தரத்தில் பத்து மாணவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாய் இருந்தால்  உலகில் உள்ள நாமெவரும் பெருமைப்பட ஏதுமில்லை.
வெளிநாட்டிலுள்ளவர்களின் உதவிகள் செழுமையாக ஆற்றுப்படுத்தப்படவில்லையென்பது நம்மெல்லோருக்குமுள்ள மனக்குறையென்பதை ஊரவர்களும் நாமும் அறிவோம்.சரியான வழிகளைக்காண முற்படுவோம்.

மனிதர்களிடம் பொதுமையாக ஏற்படுகின்ற மாற்றங்கள் வெளிநாடுகளிலும் உண்டு. உள்நாட்டிலும் உண்டு.

 நம் மண்ணின் கீர்த்திகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அழகான அலைகள் ஆண்டாண்டு காலமாய் அதைத்தான் செய்கின்றன உரத்த இசை கலந்த குரலில்.
நன்றி.




நம் மண்ணின் கீர்த்திகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அழகான அலைகள் ஆண்டாண்டு காலமாய் அதைத்தான் செய்கின்றன உரத்த இசை கலந்த குரலில்.
நன்றி.

No comments:

Post a Comment