Bamini Font
Bamini Font Link
Friday, 1 April 2016
ஆரோக்கிய உணவு.
April 01.2016ம் திகதி அனலைதீவு அருணோதயா முன்பள்ளி குழந்தைகளுக்கு ஆராக்கிய உணவாக வரகு பச்சையரிசி பயறு மற்றும் முருங்கையிலை கலந்து காய்ச்சிய கஞ்சி மூத்தவர்கள் திரு.வை.வைரவன் திரு.வை.அருச்சுனன் திரு.ஐ.சிதம்பரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.ஆரம்பமாக இந்த ஆரோக்கிய உணவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வழங்கவுள்ளோம். குழந்தைகளின் விருப்பத்தைப் பொறுத்து கிழமையில் மூன்று நாட்கள் கொடுப்பதற்கு முனைவோம்.இம்முயற்சியானது குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனப்படுத்துவதோடு இயற்கையோடு இணைதல் உணவு பரிமாற்றத்தின்போது பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல் சிறுதானியங்களின் அருமையை முன்னிறுத்துதல் போன்ற விழிப்புணர்வு நிலையை ஏற்படுத்துவற்கானதாகும். இம்முயற்சியை ஊரிலுள்ள மற்றைய மூன்று முன்பள்ளிகளிலும் தொடர்வதற்கு விருப்புள்ளவர்கள் தாங்களாக முன்வந்து நேரடியாக பற்கேற்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். இம்முயற்சியில் விருப்புள்ள மற்றைய ஊர் மக்களும் இப்பணியை தொடரவேண்டும் என்பதும் எமது எண்ணமாகும். மக்களின்மேல் அக்கறையுள்ள முகப்புத்தகக்காரர்களும் பங்குகொள்வார்கள் தத்தமது ஊர்களில் இம்முயற்சியைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையோடு அனலைதீவு அறநெறி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment