Tuesday, 1 November 2016

மாயப்புதையல்.



கிழட்டு இரவொன்று
வரும் வழியில்
தடுக்கி விழுந்து
இருட்டைக்கொட்டித்
தூரமாய் 
பழுப்புச் சூரியனைப்
போர்த்து மூடியது.

மீன்களின் செதில்களில்
சிக்கிய கடல்
அவிழ்க்கமுடியாத முடிச்சுகளிலிருந்து
முத்துக்களைக் கரைகளில்
மாயப் புதையல் செய்தது.

காற்றுக்குள்
வேர்விட்ட மரங்கள்
மண்ணைச் சுவாசித்தபடி
மனதிற்குள் துளிர்த்தன.

ஒற்றை நிலவை
வயல்வெளியின் எல்லாக் கிணறுகளும்
நெற்றிப் பொட்டாய் இட்டிருந்த
பௌர்ணமிக்குள் 
சூரியனும் கல்லெறிந்தான்
வெளிச்சமாய்.
                               -சிவம்.

No comments:

Post a Comment