மனச்
சூடு.
தோட்டத்து
வேலியில் மாட்டிய
மட்டை
கட்டின ஆட்டைப் போல
வாழ்ந்து
38 வருடம்
பனியாய் உருகிற்று.
ஆட்டுக்கும்
மேய்வெளியில்லாத
பனிக்கும்
என்ன
சம்பந்தம்?
மூத்திரம்
பேய்ஞ்சா
முறிச்செறிகிற குளிரில்
பழுத்த
மேப்பிள்
இலைக்குக்கீழே
அணிலொன்று
ஒளித்துவைத்த
உழுத்துப்போன
வேர்க்கடலையாய்க்கூட
ஊர்
பெயர்ந்த வாழ்வு இல்லை.
எல்லா
மொழிகளும் பேசும்
உலகத்துப்
பிள்ளைகளோடெல்லாம்
ஒரே
வகுப்பில் படிக்கின்ற
கடைசிப்
பிள்ளை
சிங்களமும்
ஒரு
மொழிதான் என்கிறான்.
பேரன்
கலப்பினம் என்பதால்
பேரனோடு
பேச
மொழியில்லாத
தாத்தாவானபின்பு
தமிழ்த்
திமிரும்
பொல்லூன்றியது.
-சிவம்.
No comments:
Post a Comment