யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த.சாதரணப் பரீட்சையில் 23 மாணவர்கள் தோற்றி 19 பேர் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளனர்.இப்பெருமிதமான மகிழ்வான முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உழைத்த வித்தியாலய அதிபர் பெருமதிப்பிற்குரிய திரு.ராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் மற்றும் பெருமதிப்பிற்குரிய அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம். மதிப்புமிக்க மாணவச் செல்வங்களனைவருக்கும் நமது மனதார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
தொடரட்டும் முன்னேற்றமான வெற்றிப் பாதை.














































































