Friday 17 March 2017

சமூக வலுவூட்டல்.

 சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலன் நோன்புகை அமைச்சினால் அனலைதீவு தெற்கு J/38 கிராம அலுவலர் பிரிவு மாதிரி கிராமமாக முன்மொழியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பனம் பொருட்கள் உற்பத்திகளை மேம்படுத்தும் பொருட்டு ஏழு மில்லியன் (7 million)  ரூபாய்கள் வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி நோக்கங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கிராம மக்களுடனான கலந்துரையாடல் கடந்த 15ம் திகதி ஐயனார் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சின் பிரதிநிதிகள், சமுர்த்தி பணிப்பாளர்கள், யாழ் மாவட்ட செயலக உயரதிகாரிகள், ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அனலைதீவு தெற்கு கிராம மக்கள் என்போர் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் இருந்து மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று கிராமங்களில் அனலைதீவு தெற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.




 தகவல் மற்றும் படங்கள்: திரு.த.கோகுலராஜ்

No comments:

Post a Comment