Sunday, 16 April 2017

குமரிக் கற்றாளை.


குமரிக் கற்றாளை.

ஊட்டி வளர்த்த சூரியரே
உயர நீண்டு பூ விரித்தேன்.
எட்டி இறங்கி வாருமையா.
எனக்கு முத்தம் தாருமையா.
வாட்டி வதைக்கும் வெய்யிலுக்குள்
வளரும் வித்தை தெரிந்துகொண்டேன்.
நீட்டி நிலத்தில் வேரை வைத்தால்
நிமிர்ந்து பார்க்க ஊரை வைப்பேன்.
ஒற்றைக் கையில் தாம்பூலம்
உனக்குத்தானே மகராசா.
பற்றைகளின் பக்கத்தில் நான் வளர்ந்தேன்.
பார்வைகளை என் பூவில் ஊற்றி வைத்தேன்.
ஒற்றைப்பனை அழகிற்கு என்னழகு உயரந்தான்.
ஒற்றையடிப் பாதைக்கும் நான் தூரமென்ற துயரந்தான்.
-சிவம்.

படங்கள்: திரு.த.கோகுலராஜ்.
அனலைதீவு.






No comments:

Post a Comment