Monday 31 July 2017

நயினாகுளம்.

 மதிப்பிற்குரியவர்களோடு!
அனலைதீவு ஐயனார் கோவில் வரலாற்றோடும் பாடல்களோடும் ஆண்டாண்டு காலமாய் ஊறிக்கிடந்து அனலைதீவு மக்களின் மனங்களிலெல்லாம் ஈரமான நினைவுகளாகவே கசசிவோடு இருக்கும் நயினாகுளம் இன்று வயல் மண்ணுக்குள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இக்குளத்தை அளவான ஆழத்தோடு அகலப்படுத்தி மழைநீர் சேமித்து ஊரின் நிலத்தடி நீரையும் நீரின் தன்மையையும் பாதுகாக்கவேண்டுமாயின் இக்குளம் விரைவாகப் புனரமைக்கப்படவேண்டும்.

இனி வரும்அனலைதீவு ஐயனார் ஆலய நிர்வாகத்தினரும் ஊர்மக்களும் முன்னுரிமை கொடுத்து இப்பணியை நிறைவேற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆண்டுதோறும்  ஐயனாரைத் தேடி ஓடிவரும் வெளிநாட்டு பக்தர்களும் வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இந்தக் குளத்தைச் சீரமைத்து மீட்டெடுக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டுமென வேண்டுகிறோம்.




No comments:

Post a Comment