Sunday, 28 January 2018

குடிநீர்.

அனலைதீவு மக்களின் குடிநீர் வளத்தைப் பாதுகாப்பதிலும் புதிய குடிநீர்க் கிணறுகளை அமைத்து மக்களின் குடிநீர்த் தேவையை பாரம்பரிய இயற்கையோடு இணைந்த முறையில் தீர்த்துவைப்பதிலும் அக்கறையோடும் பொறுப்போடும் செயற்படும் அரச நிர்வாக அலகுகள் அவற்றின் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் அனலைதீவு மக்களாகிய நாம் இயற்கை எமக்கு கொடையாக தந்த குடிநீர்க்கிணறுகளிலிருந்து பவுசர்மூலம் நீரை உறிஞ்சி உப்புநீராக்கும் நடைமுறையை முற்றாகஇ நிரந்தரமாக நிறுத்தி எமது ஒரேயொரு குடிநீர்வளமான குடிநீர்க் கிணறுகளை பாதுகாத்து தங்களின் செயற்பாடுகளை பயனுள்ளதாக மாற்றியமைத்து உதவுமாறு பணிவோடு வேண்டுகிறோம்.
அனலைதீவில் உள்ள பயன்பாட்டிலிருந்த, பயன்பாட்டுக்கு மாற்றக்கூடிய, பயன்பாட்டிலுள்ள குடிநீர்க்கிணறுகளின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment