அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தினுடைய 2018ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 01.02.2018 ம் திகதி பாடசாலை முதல்வர் திரு. இ. இராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திரு. க. சசிகுமார் (தேசிய தொழில்நுட்ப அலுவலர் விளையாட்டுத்துறை)மற்றும் சிறப்பு விருந்தினர்கள் திரு.சா.தேவேந்திரநாதன் (ஒய்வு பெற்ற பதில் முகாமையாளர். மக்கள் வங்கி )
திருமதி. ஜெயந்தினி சிவபாலன்
(முன்னாள் அதிபர், யா/அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம்) ஆகியோரும்
கௌரவ விருந்தினர்களாக செல்வி. S. விக்கினேஸ்வரி (யா/அனலைதீவு வடலூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை)
திருமதி.தர்மிளா செந்தூரன்
(நூலகர், அனலைதீவு பொது நூலகம்) மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் அனலைதீவு சதாசிவ மகா வித்திதியாலத்தினுடைய பழைய மாணவர் திரு. வேலன் சந்திரபாலன் அவர்கள் தனது பிறந்த தின அன்பளிபாக அனைத்து மாணவர்களுக்குமான பரிசுப் பொருளாக பயன்தரும் மரக்கன்றுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களுடன் செய்திப்பதிவு:திரு.த.கோகுலராஜ்
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
































































































































No comments:
Post a Comment