Saturday, 7 April 2018

உப்புத் தீவு.



அண்டங்கண்ட காகம் வந்து
தட்டி முட்டி உடைச்சதென்ன?
தண்டப் பணம் கட்டாம
தாகம் ஆறிப் போனதென்ன?
போதையில கத்திறப்போ ஆகாயம்
பொத்தல் என்று சொல்லுவியோ?
போற திசை தெரியாம- மேல
மேகத்தில சிக்குவியோ
உன் நிறத்து மேகத்துக்கு
ஒரு செய்தி சொல்லிவிடு
மண்ணுக்குள்ளும் ஈரமில்ல
மனசுக்குள்ளும் ஈரமில்ல-பூமி
தாங்கி வைச்சு தந்த தண்ணி
தாகத்துக்குச் சொந்தமில்ல.
பேரனுக்கு பானைக்குள்ள
உப்புச்சேர்த்து  வைக்கிறாக.
ஊருக்குள்ள கடலை விட்டு
உப்புத் தீவு கட்டுறாக.
-சிவம்.
படங்கள்: திரு..உதயப்பிரகாஷ்




No comments:

Post a Comment