Apr
05.2018ம் திகதி அனலைதீவு தெற்கு அ.த.க.வித்தியாலய
மாணவர்களுக்கான 2018ம் ஆண்டு முதலாம்
தவணை பரீட்சை கணிப்பீட்டு தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு மதிப்புமிக்க ஆசிரிய சமூகத்தினரின் ஏற்பாட்டில் ஆர்வமுள்ள பெற்றோர்களின் ஒத்துழைப்போடு
நடைபெற்றது.
வித்தியாலயத்தில்
கற்கும் 53 மாணவர்களில் ஆங்கில பாடநெறியில் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்று ஏ
தரத்தில் சித்தியடைந்த 25 மாணவர்கள் பாராட்டி
ஊக்குவிக்கப்பட்டனர்.
மாணவர்கள்
அனைவரினதும் கல்வி வளர்ச்சியில் பங்காற்றிய பெருமதிப்பிற்குரிய ஆசிரியர்கள் அனைவருக்கும் நமது பாராட்டையும் நன்றி
கலந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆங்கில
பாடநெறியில் கணிசமான முன்னேற்றத்தை உறுதிப்படுத்த உழைத்த தொண்டர் ஆசிரியை திருமதி.க.அஞ்சலா அவர்களுக்கு எமது
பாராட்டுக்கள்.
அவசியமான இந்நிகழ்வினை
நெறிப்படுத்தி பெற்றோர்களை பங்குகொள்ள ஊக்குவித்த வித்தியாலய அதிபர் மதிப்பிற்குரிய திரு.இராஜேஸ்வரன் அவர்களுக்கு
நமது பாராட்டு உரித்தாகட்டும்.
வரவேற்று
பாராட்டவேண்டிய விடயமாக இந்நிகழ்வில் அதிகமான அக்கறையுள்ள பெற்றோர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு
சிறப்புற அமைய உழைத்த அனைவருக்கும்
ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவித்து இதுபோன்ற
நிகழ்வுகளை வரவேற்போம்.
படங்கள்:திரு.க.உதயப்பிரகாஷ்
அனலைதீவு
கலாசார ஒன்றியம் கனடா.
No comments:
Post a Comment