Friday, 13 April 2018

சமய அறிவு.

 Apr 12.2018ம் திகதி அனலைதீவு  பெரியபுலம் ஸ்ரீ சங்கரநாதர் மகா கணபதிப் பிள்ளையார் கோவில்  திருவிழாவையிட்டு அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா நிர்வாகத்தினரின் உதவியுடன் அனலைதீவு கலாசார ஒன்றியச் செயற்பாட்டுக்குழுவினரின் ஏற்பாட்டில் அனலைதீவு J/37 கிராமஅலுவலர் பிரிவு பொதுமண்டபத்தில்  மாணவர்களுக்கான சமயபாடப் பரீட்சை நடைபெற்றது.முதல் நிலை, நடுநிலை, உயர்நிவை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பரீட்சை நடைபெற்றது.
சமய அறிவு நிலை உயர்வுக்கான இந்நிகழ்வில் இந்து மற்றும் கிறிஸ்தவ மாணவர்கள் தத்தமது சமய அறிவுக்கான பரீட்சையில் தேர்வு எழுதியது வாழ்த்தி வரவேற்கவேண்டிய சிறப்பம்சமாகும்.
முன்மாதிரியான இம்முயற்சியை சிறந்த முறையில் முழுமைப்படுத்த ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இனிவரும் காலங்களில் ஆலயங்கள் இதுபோன்ற அவசியமான சமயவளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதனூடாக  சமூகப் பணிகளிலும் ஈடுபடவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
படங்கள்.திரு.த.கோகுலராஜ்
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா










No comments:

Post a Comment