Saturday, 12 May 2018

"சதாசிவ வித்தியாசாலை"


"சதாசிவ வித்தியாசாலை"
 அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம் - ஆரம்ப வரலாறும் விருத்தியும்.

அனலைதீவின் மாணவர்கள் கல்வி கற்பதற்கு வசதியற்றிருந்தமை ஒரு பெருங் குறையாகவிருந்தது. இற்றைக்கு ஏறக்குறைய 125 வருடங்களுக்கு முன்னர்இ இதனை நன்குணர்ந்த திரு. குழந்தை உபாத்தியாயர் அவர்கள் தமது சொந்தச் செலவில் ஒருசிறிய கொட்டில் அமைத்து தமது சிரமத்தைப் பொருட்படுத்தாது அரிச்சுவடு சமய பாடம் என்பவற்றைப் போதித்து வந்தார்.  மாணவர்களிடமிருந்து சிறு ஊதிபம் பெற்றுத் தமது வாழ்க்கைச் செலவை நடாத்தினார்.  அக்கால மாணவர்களில் பெரும்பாலோர் வசதியற்றவர்களாகையால் அக்கல்வியறிவைத்தானும் பெறமுயலவில்லை.  அச்சமயத்து இருந்த திரு.  முத்து உபாத்தியாயர் அவர்கள் பாடசாலைகளை முக்கிய ஸ்தானங்களாக அமைத்து அதன் மூலம் தமது சமயத்தைப் பரப்பி வரும் அமெரிக்க மிசானரிமார்களின் உதவியைக் கொண்டு ஓர் பாடசாலையை அமைத்தார்.  அப்பாடசாலை ஒரு மிசான் பாடசாலையாக திரு. முத்து உபாத்தியாயர் தலைமையில் நடைபெற்றது.
இந்நேரத்தில் கிறீஸ்தவ குடும்பங்கள் ஒன்றுமில்லாத இவ்வூரில் சைவப்பாடசாலைகள் இல்லையென்ற குறை பல அபிமானிகள் மனதில் ஒரு புதிய உணர்ச்சியை உண்டாக்கியது.  இதில் விசேடமாக உந்தப்பட்டவர்கள் திரு. . சின்னப்பா உபாத்தியாயர் அவர்களும் அக்கால உடையார் திரு. சு வேலுப்பிள்ளை அவர்களும் ஆவர்.  இவ்வித உணர்ச்சி மேம்பாட்டால் மிசான் பாடசாலை மறைய நேரிட்டது.  தமது விடாமுயற்சியின் காரணமாய் திரு. . சின்னப்பா உபாத்தியாயர் அவர்கள் பல அபிமானிகளின் பேராதரவுடன் ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூறாம் ஆண்டளவில் ஒரு சிறு கொட்டிலை அமைத்தார்.  அதற்குச் "சதாசிவ வித்தியாசாலை" என்னும் பெயர் இடப்பட்டது.  வண்ணார்பண்ணைஉவாட்டன்டேவிமுத்துத்தம்பிப்பிள்ளை அவர்களை இதன் முகாமைக்காரராக நியமித்துத் தாமே ஆசிரியராகக் கடமையாற்றினார். இருவருடங்கள் ஒருவித ஊதியமேனும் பெறாமலே வித்தியாசாலையில் தொண்டாற்றினார்.  இவ்வித்தியாசாலை தாபிக்கப்பட்டகாணி பிரம்ம சிறி சின்னையர் கைம்பெண் கமலம்மா அவர்களால் தருமமமாகக் கொடுக்கப்பட்டதாகும்.  அன்னாரின் இப்பெருந்தருமமே இவ்வித்தியாசாலையின் தோற்றத்திற்கு முதற்காரணமாகும்.
இவ்வித்தியாசாலையில் மாணவர் வரவு நாளுக்கு நாள் கூடி வரவே வித்தியாசாலைக்கு அமைக்கப் பெற்ற சிறிய கொட்டில் போதிய அளவாகக் காணப்படவில்லை. இதனால் திரு. . சின்னப்பா உபாத்தியாயர் அவர்களும் மற்றும் பெரியோர்களும் ஊரிலுள்ள கல்வி அபிமானிகளிடம் பனைமரம் கிடுகு இன்னுந் தேவையான பொருட்களைப் பெற்று நூறு மாணவர்கள் இருந்து கல்வி பயிலக்கூடிய கொட்டிலாக அதைப் பெருப்பித்து மண்ணினால் அரைச்சுவரும் கட்டி மாணவர்கள் இருப்பதற்குப் போதிய திண்ணைகளும் அமைத்தனர்.
மாணவரின் வரவுத் தொகை அதிகரித்த காரணமாக தான் மாத்திரம் கற்பிப்பது முடியாதெனக்கண்ட திரு. . சின்னப்பா உபாத்தியாயர் அவர்கள் சங்கானை திரு. பொன்னம்பலபிள்ளை ஆசிரியர் அவர்களைத் தலைமையாசிரியராக நியமித்துத் தாம் உதவியாசிரியராகவிருந்து பாடசாலையை நடாத்தி வந்தார்.  தலைமையாசிரியரின் சாப்பாடு வேதனம் ஆகிய செலவுகளுக்கு ஊரவர்களின் சிறு உதவிகளைப் பெற்று வந்தார்.  தாம் ஒரு பலனையுங்கருதாது மாணவர்களின் கல்விவளர்ச்சியில் சிரத்தை கொண்டவராய்ப்பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் வித்தியாசாலை ஆறுவருடம் வரை நடாத்தி ஆயிரத்து எண்ணூற்றுத் தொன்னூற்றெட்டாம் ஆண்டு அரசினரின் உதவி நன்கொடைப்பணம் சிறிது கிடைக்கச்கூடியதாய் அமைந்தது. இத் தொகை ரூபா இருநூற்றுக்கு மேற்பட்டவில்லையெனக்கூறலாம்.  அதுவும் தலைமையாசிரியரின் வேதனத்திற்குக் கொடுக்கப்பட்டது.
இதன் பின்னர் யாழ்ப்பாணம் நாவலர் பாடசாலைத் தலைமையாசிரியராகவிருந்த திரு.மாப்பாணர் வைத்தியலியங்கம் அவர்கள் முகாமைக்காரராகிச் சிலமாதங்கள் நடாத்தி விலக அனலைதீவு உடையாராகவிருந்த திரு சு. வேலுப்பிள்ளளை அவர்கள் முகாமைக்காரனாக நியமிக்கப்பட்டார்கள். தலைமையாசிரியராகவிருந்த திரு. பொன்னம்பலபிள்ளயைவர்கள் தமது சொந்த நலனைக் குறித்து விலக காரைநகர் திரு. வி இராமலிங்க ஆசிரியர் அவர்கள் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார்கள்.  முகாமைக்காரர் திரு சு. வேலுப்பிள்ளை அவர்களும் விதானையாராகவிருந்த திரு. கதிரவேலு அவர்களும் தலைமையாசிரியரின் சாப்பாட்டுச் செலவைக் கொடுத்து உதவினார்கள்.  அக்கால மாணவர்கள் கல்வியில் நாட்ங்கொள்ளாதவர்களாய் வித்தியாசாலைக்குச் சமுகங் கொடுப்பதில் ஒழுங்கற்றவர்களாயிருந்தார்கள்.  பெற்றார்கள் இந்நிலையையுணராதவர்களாய் தம்கருமங்களில் உதவி செய்தால் போதும் என்ற மனப்பான்மையுமையவர்களாயிருந்தார்கள்.  பாடசாலைக்குச் செல்லும் வயது வந்தவர்களைக்கூட வித்தியாசலைக்கு அனுப்பாது அவர்கள் தம் கருமங்களில் ஈடுபடுத்தி வைத்திருந்தனர்.  இந்நிலையையுணர்ந்த முகமைக்காரர் அவர்களும் திரு. . சின்னப்பா உபாத்தியாயர் அவர்களும் ஒவ்வோர் இல்லங்களுக்குஞ்சென்று பெற்றார்களுக்குப் புத்திமதி கூறி மாணவர்களை வித்தியாசாலைக்கு வரச் செய்து கல்வி புகட்டிவந்நதனர்.  வருடமுடிவில் வரும் அரசினர் நன்கொடைப் பணத்தின் மூன்றிலிரண்டு பாகத்தை தலைமையாசிரியரின் வேதனத்திற்குக் கொடுத்தும் மீதிப்பாகத்தை திரு. . சின்னப்பா உபாத்தியாயரின் வேதனத்திற்குக் கொடுத்தும் வித்தியாசாலையைத் திறம்பட நடாத்தி வந்தனர் முகாமைக்காரர்.  ஆயிரத்துத் தொழாயிரத்துப் பத்தாம் ஆண்டளவில் தலைமையாசிரியர் திரு வி. இராமலிங்கம் அவர்கள் விலக நெடுந்தீவு திரு . சீ. வேலுப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார்.  இவரின் தன்னலமற்ற சேவையும் ஊக்கமும் மாணவர்களின் தொகையை அதிகரிக்கச் செய்தது.  உதவி ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடியது.  இன்னும் இவர் பலவருட காலம் மலைமையாசிரியராகவும் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றியதோடு நில்லாது வித்தியா சங்கத்தினதும் வித்தியாசாலையினதும் முன்னேற்றங் கருதி உழைத்த மற்றும் பெரியார்களுடன் ஒத்துழைத்து வேண்டிய உதவிகளைச் செய்தவர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
-தொடரும்.
இந்த அரிய வரலாற்றுத் திரட்டை  ஆவணப்படுத்தியவருக்கு நன்றி.
நன்றி: சதாசிவன்.

No comments:

Post a Comment