May 06.2018ம்
திகதி யாழ்ப்பாணம் பல்கலை கழக மருத்துவ பீட மாணவ
ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் இலவச
மருத்துவ முகாம் நடைபெற்றது. காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகிய நிகழ்வில் கண் பரிசோதனை,
கண்ணாடி வழங்கல், பற்சிகிச்சை, குழந்தைகளுக்கான
சிகிச்சை, பொதுவான
சிகிச்சை மற்றும் வைத்திய ஆலோசனைகள் வைத்திய நிபுணர்களினால் வழங்கப்பட்டது.
அனலைதீவு
மக்களுக்கு இந்த
இலவச மருத்துவ முகாம் அதிகமான பயனள்ளதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மிகவும்
மயனுள்ளதாக அமைந்த இந்த
இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்து நிறைவுபடுத்திய யாழ்ப்பாணம் பல்கலை கழக மருத்துவ பீட மாணவ
ஒன்றியத்திற்கு அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்வோம். இலவச மருத்துவ முகாம்
சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனலைதீவு கலாசார ஒன்றிய செயற்பாட்டுக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் அவைருக்கும் நன்றி.
பயனுள்ள இந்த
நிகழ்வுக்காக வருகை தந்த மதிப்பிற்குரிய மருத்துவ
துறைசார் பெருமக்களுக்கான போசன இளைப்பாறல் ஒழுங்குகளை அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா நிறைவுபடுத்தியது.
படங்களுடன்
தகவல்:திரு.த.கோகுலராஜ்













No comments:
Post a Comment