தெற்கு
அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம்.
“மூர்த்தி
சிறிதெனினும் கீர்த்தி மிகப்பெரியது” என்ற
வாய்மொழிக்கமைய ஓரளவு வளம் அமைந்த நாடு
அனலைதீவு. மொழி,
பண்பாடு, சமயம், முயற்சி ஆகியவற்றால் பூரிப்பும் பெருமையும் பெருமிதமும் அளிப்பவர் இங்குள்ள மக்கள். இங்கு
கலை வளர்க்கும் நிலையங்களாக முன்று கல்விச்சாலைகள் மிளிர்கின்றன.
இவ்ற்றுள்
தென்பகுதியிலுள்ள பாடசாலை 04-03-1947 இல் அரசினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிப்பதற்கு
அப்பகுதியலுள்ள பெருமகனார் திரு க. வேலாயுதபிள்ளை
(தெற்கு முருகமூர்த்தி உரிமையாளர்) அவர்கள் நன்கொடையாக நிலம் அளித்துதவினார். “படித்தவன்
பலவான்” என்பதனையுணர்ந்த
அப்பகுதி மக்கள் தற்காலிக கட்டிடம் அமைப்பதற்கு தங்களாலியன்ற உதவிகளைத் தாமே முன்வந்து செய்துதவினர். இப்பாடசாலையின்
முதற் தலைமையாசிரியராக திருவாளர் சி. தில்லையம்பலம் அவர்கள்
பணிபுரிந்தார். இவர்
அனலையைச் சார்ந்த சின்னப்பர் உபாத்தியாயரின் மைந்தன் ஆவார்.
பாடசாலை
சிறப்புற மெல்ல மெல்ல வளர்ந்து வந்தது. பல
தலைமை ஆசிரியர்களும் உதவியாசிரியர்களும் வந்து பணிபுரிந்து சென்றார்கள். ஆவர்களின்
பெருமுயற்சியினால் தற்காலிக கட்டிடங்கள் நிரத்தரமாக மிளிர்கின்றன. மலசலகூடங்களும்
ஆசிரியர் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள்
நாட்டிய நிழல் மரக்கன்றுகள் நிழலைத்தருகின்றன. இவையெல்லாம்
தம்மை ஆக்கிய ஆசான்களின் குணச்சிறப்புக்களையெல்லாம் புதிதாகப் புகுவோர்க்கு மெதுவாகக் கூறிக்கொண்டிருக்கின்றன.
இப்பாடசாலையில்
இருந்து ஐந்தாம் தரப் புலமைப் பரிசில்
பெற்றுச் சென்ற மாணவர்கள் தாமும் புகழுடையவராய் இப்பாடசாலைக்கும் புகழ் சேர்ப்பவர்களாய் மிளிர்கின்றார்கள். இப்பாடசாலை
இடையிடையே சில ஆண்டுகளில் ஆசிரியர்
பற்றாக்குறையால் நலிவுற்றதுமுண்டு. ஆனால்
அக்குறையினை தற்பொழுது நிவர்த்தி செய்து ஆறு ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்கள். இப்பாடசாலையின்
வளர்ச்கிக்காக பத்து வருடகாலமாக (1995-2004) திரு. வீ. ஓங்காரலிங்கம் அவர்கள்
அதிபராக பணிபுரிந்துள்ளார்.
இப்பாடசாலை
கீதம்
“அனலையின்
தென்னில்
அழகுடன்
அமைந்த
கலையகத்
தாயே- வாழ்க!
எங்கள்
கலையகத் தாயே – வாழ்க!”
எனத்
தொடர்கிறது.
இப்பாடசாலையின்
சுற்றுவேலி இங்குள்ள பெற்றோர்களினதும் பழைய மாணவர்களினதும் முயற்கியால்
சீர் செய்யப்பட்டு வருகிறது. எனவே சுற்றுமதில் அமைக்கப்பட
வேண்டும் என்று பாடசாலை வேண்டி நிற்கின்றது. அத்துடன் விளையாட்டுத் திறனை மாணவர்களிடையே மேம்படுத்துவதற்கு வேறாக்கப்பட்டுள்ள மைதானம் ஒன்றில்லை. அத்தேவையினை
நிறைவேற்றுவதற்கும் அயலிலுள்ள காணியினை பாடசாலை விளையாட்டு மைதானமாக்குவதற்குரிய வழிவகைகளைச் செய்து தரவேண்டும் என்று பாடசாலைச் சமூகம் வேண்டி நிற்கின்றனர்.
இப்பாடசாலை
மேலும் வளர்ச்சியுற நிறைவேற்ற வேண்டியவையாகக் காணப்படுபவை ஆரம்பக்கல்வி இசைக்கருவிகள்இ சிறுவர் பூங்காஇ மற்றும் பெண்கள் சலகூடம் குழாய் மூலம் நன்னீர்இ போதிய விளையாட்டு உபகரணம் வகுப்பறை அலுமாரிகள் கணணி ஓவர்கெட்புறொnஐக்ற்றர்
தொலைக்காட்சிப்பெட்டி மினஇணைப்பு பெற்ல்இ உணவுக்கொட்டகை போன்றவையாகும்.
தற்பொழுது
அத்தியாவசிய தேவையாகிய குடிநீர் இன்மை இப்பாடசாலைக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. தற்பொழுது
மதிய உணவு வழங்குவதால் கூடுதலான
நீரைப் பாடசாலைக்கு வெளியிலிருந்து எடுப்பதற்கு பாடசாலைக்கு கிடைக்கப்படும் நிதி போதாமையினால் 2005 ஆம் ஆண்டுக்காக
இவ்வூரைச் சேர்ந்த (டுபாயில்) வசிக்கும் திரு ஏ.P. பரமலிங்கம்
ஐயா அவர்கள் நிதியினைத் தந்துதவினர் என்பது போற்றக்கூடிய விடயமாகும்.
இப்பாடசாலை
தோன்றுவதற்கு தமது காணியை அரசுக்கு
வழங்கி பாடசாலையினைத் தோற்றுவிக்க உதவவியவர் திரு
க. வேலாயுதம் தெற்கு முருகமூர்த்தி கோவில் உரிமையாளர். துற்காலிகமாக
அரசினால் அமைக்கப்பட்ட இப்பாடசாலையின் முதல் அதிபராக திரு. சி தில்லையம்பலம் ஆசிரியர்
1947 இல் பதவி ஏற்று சில
ஆண்டுகள் பணியாற்றினார். இவரின்
தந்தையார் திரு. அ. சின்னப்பா உபாத்தியாயர்
சதாசிவ பாடசாலையின் ஆதிகால அதிபராகக் சடமையாற்றி அப்பாடசாலையின் முன்னேற்றத்துக்கு இரவு பகல் உழைத்துள்ளார்
என்பதை யாவரும் அறிந்துள்ளனர். இவரைத் தொடர்ந்து திரு. சிவபாதசுந்தரம் காரைநகர் மற்றும் க. தியாசராசா நயினாதீவு
ஆகியோர் பணிபுரிந்தனர்.
திரு.
தியாகராசா பணியாற்றிய காலப்பகுதியில் பாடசாலையின் முன்னேற்றத்துடன் ஆலயப்பணிகளையும் சமூகப் பணிகளையும் மேற்கொண்டிருந்தார். இவரின்
நிர்வாகக் காலகட்டத்திலிருந்து பல மாணவர்கள் புலமைப்
பரிசில்கள் பெறும் வாய்ப்புக்களை பெற்று வந்தனர். இவர்
சிவபூசை தினமும் புரிந்து சிவனை வழிபடுபவர். இவருக்கு
சைவப்புலவர் என்ற சிறப்புப்பட்டமும் வழங்கப்பட்டிருந்தது. சைவ
சமயத்தொண்டர் சபையை தலைவராக இருந்து அனலையில் தோற்றுவித்த பெருமையும் இவரைச்சாரும். இவரின்
காலத்தில் திரு. வே. குகதாசன் தொண்ர்
சபை செயலாளராக செய்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.
க. கனகரெத்தினம் (நயினாதீவை சார்ந்தவர்) அதிபராக பல ஆண்டுகள் திறன்பட
நர்வாகம் செய்து பல மாணவர்களை 5 ஆம்
பகுப்பு பலமைப்பரிசுபெற உழைத்தவர் என்பது குரிப்பிடத்தக்கது. இதன் பினனர் திரு.
பாலசிங்கம் ஆசிரியர் நயினாதீ திருமதி பொ. நாகமுத்து ஆசிரியை திரு
தம்பு ஆசிரியர் திரு குமாரசாமி ஆசிரியர்
திருமதி வி. பத்தினிப்பிள்ளை ஆசிரியை
அனலைதீவு திரு.வை. குணானந்தன் ஆசிரியர்
திரு P. ஞானசுந்தரம் (நயினாதீவு) அவர்களும் அதிபராக கடமையாற்றியுள்ளனர் .
இன்றைய
போர்காலச் சூழல்கள் மத்தியில் திருமதி விக்னேஸ்வரி அதிபர் தமது நிர்வாகப் பணியை
திறன்பட நடாத்தி வருவதன் மூலம் பல முன்னேற்றங்களை எய்தியுள்ளதாக
அறியக்கிடக்கிறது. கிராமவாசிகளின்
புலம்பெயர்ந்தவர்களிடம்
இருந்து சில உதவிகளைப் பெற்று
பாடசாலையின் முக்கிய பணிகளான நூலகம் குடிநீர் வசதி சமையல் அறை
அமைப்பு போன்ற பல முக்கிய பணிகளை
நிறைவேற்ற முயற்சிக்கும் அதிபருக்கு நேசக்கரம் நீட்டி வேண்டிய உதவிகளைப் புரிய முன்வர வேண்டும்.
இப்பாடசாலையின்
வளர்ச்சிக்கு புலம்பெர்ந்த அனலை வாசிகளின் பங்களிப்பு
மேலும் தொடரவேண்டும் என வேண்டுகின்றேன்.
வடலூர்
அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம்
அனலைதீவில்
இரண்டாவதாகத் தோற்றுவிக்கப்பட்ட பாடசாலை இதுவாகும். சுதாசிவ
பாடசாலை மாணவர்களின் இடநெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு இப்பாடசாலை வடலூர் பகுதியில் 1946 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
ஆரம்பப்
பாடசாலை அதிபராக திரு. மார்க்கண்டு முதலில் நியமிக்கப்பட்டார். இவர்
புளியங்கூடல் பகுதியை நிரந்திர வதிவிடமாகப் பெற்றிருந்தார். இவர்
ஒரு திறமை மிக்க நிர்வாகியெனக் குறிப்பிடலாம். இப்பாடசாலையின்
முன்னேற்றத்துக்கு தமது சக்தி அனைத்தையும்
விரயம் செய்து அளப்பரிய முன்னேற்றங்களைக் காட்டியுள்ளார். புல
மாணவர்கள் 5 ஆம் வகுப்புப் புலமைப்
பரிசில்கள் பெற்ற படிப்பினை மேற்கொண்டு பல் கலைக்கழகங்கள் புகுந்து
பட்டதாரிகளாகியுள்ளனர்.
இரண்டாவது
அதிபர் பதவி வகுத்த திரு.
இராமசாமி எழுவதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர்
சிவபூசைப் பிரியர் முன்னைய அதிபருக்கு நிகராக தமது கடமைகளைப் புரிந்தவர்.
பண்டிதர் P. குணபதிபிள்ளை 1966 ஆம் ஆண்டளவில் அதிபர்
பதவி வகித்துள்ளார். இவரின்
தாயக மண் அனலைதீவு.
பண்டிதர் வித்துவான் டீ.ழு.டு
பட்டத்தையும் பெற்றிருந்தார். இவர்
கண்டிப்பு மிக்க நிர்வாகியாக கடமை புரிந்தார்.
இப்பாடசாலையின் பல முன்னேற்றத் திட்டங்களை
வகுத்து வெற்றி கண்டவர். பலவிதமான கலை நிகழ்சிசிகளுக்கு வித்திட்டு
முன்னேற்றங்கள் கண்டவர். தவறு
செய்யும் மாணவர்களாயினும் சரி ஆசிரியர்களாயினும் சரி கண்டிக்கவோ
தண்டிக்கவோ தவறமாட்டார்.
திரு. தருமலிங்கம் அதிபர் இவரின் பூர்வீகம் எழுவதீவு நீணட காலமாக ஆசிரியராக
தமது துணைவியாருடன் இப்பாடசாலையில் பணிபுரிந்தவர். பதவி உயர்வு பெற்றபின்
இதே காடசாலையில் பல ஆண்டுகள் அதிபர்
பதவி வகித்தர். நா.ப. இராசையா
அதிபர். இவரது
பூர்வீகம் புங்குடுதீவு அனலையில் 5 ஆம் வட்டாரத்தில் நிரந்தரமாக
வகித்து பாடசாலைக்கு அளப்பாய சேவையாற்றியுள்ளார்.
திரு க. இளையதம்பி
அதிபர் இவர் அனலைதீவை பிற்பிடமாகக்
கொண்டவர். அதிபர் பதவி வகிப்பதற்கு முன்
சதாசிவ மகாவித்தியாலயத்தில் ஒர் சிரேஸ்ட ஆசிரியராக
பணிபுரிந்து வந்தார். வடலூர்
பாடசாலையில் அதிபர் பதவி பெற்றதன் பின்
பல ஆண்டுகள் ஓர் திறமை மிகக்
அதிபராக பணியாற்றியுள்ளர். இவர் ஆசிரியப் பணியாயினும்
சரி அதிபர் பணியாயினும் சரி மிகவும் திறமையாகவும்
தமது பணிகளை ஆற்றி மாணவர்களினதும் பெற்றோர்களினதும் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள்
மத்தியில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதை நிலைநிறுத்துவதில் முன்னிலை வகிப்பவராக இருந்துள்ளார். நல்லாசிரியரின் பண்புகள் அனைத்தையும் பெற்றிருந்ததுடன் நில்லாது நடைமுறையிலும் வாழ்ந்து காட்டியவர். மாணவர்களைத்
தண்டிப்பதிலும் பார்க்க மிகுந்த கண்டிப்புத் தொனியுடன் கடமைகளைப் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கற்பித்தல் தொழிலுடன்
மாத்திரம் நில்லாது கிராமத்தின் சமூகப் பணிகளிலும் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். ஆலயங்கள்
பலவற்றில் நிர்வாக சபை உறுப்பினர் பதவி
வகித்தும் குறிப்பாக பிள்ளையார் ஆலயத்துக்கு முகாமையாளராக இருந்து கட்டிட அபிவிருத்தி வேலைகளையும் திருவிழா உற்சவ முறைகளையும் ஆரம்பித்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு P. சுந்தரம் இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு
மேலாக ஆசிரியராகவும் அதிபராகவும் இப்பாடசாலையில் கடமையாற்றியுள்ளார். இவரின்
பூர்வீகம் அனலைதீவு. போர்காலச்
சூழலின் பல பிரச்சினைகள் மத்தியில்
தமது அதிபர் பதவியை திறம்பட மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மத்தியில் சிறப்பாக ஆற்றி வந்துள்ளார். இக்கிராமத்தின் பொது சமூகப் பணிகளிலும்
ஈடுபாடு காட்டி உதவிகள் பலவும் புரிந்துள்ளார்.
திருமதி.கே . கௌரி இப் பாடசாலையின்
இன்றைய தற்காலிக பதில் அதிபராக இவர்க கடமை புரிகிறார்.
இவரின் பூர்வீகம் அனலைதீவு. போர்காலச்
சூழலின் பல சிரமங்கள் மத்தியில்
பணியாற்றுகிறார். இவரின்
முயற்சியினால் ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
- இந்த
அரிய வரலாற்றுத் திரட்டை ஆவணப்படுத்தியவருக்கு
நன்றி.
இத்தகவல்கள்
தொகுக்கப்பட்ட காலம் போர்க்கால சூழலாகும்.
முற்றும்.
No comments:
Post a Comment