ஐயனாருக்கு அரோகரா!
மனதில் தவறென்று தோன்றுகின்ற விடயங்களை சொல்லித்தான் ஆகவேண்டும். சரியென்று எண்ணுகிறவர்கள் தூக்கிக் கொண்டாடட்டும். தவறை நியாயப்படுத்துகிறவர்கள் தள்ளுவண்டியிலேயே போகட்டும்.
வருடத்தில் ஒருமுறை வரும் திருவிழா நாளில் ஊரே சேர்ந்து எல்லாவற்றையும் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடத்தான் திருவிழா. இத்தனை ஆண்டுகளில் திருவிழா நாளில் வாகனக்கொம்பில் தோள்கொடுக்க 14 தோள்களை வரவழைக்கமுடியாத, வரக்கூடிய இளைஞர்களை உருவாக்காத, முயற்சிக்காத ஆலய நிர்வாகம் செயலாற்றல் அற்றது. இத்தகைய போக்கு வருங்காலத்தில் தள்ளுவண்டிலைத் தள்ளுவதற்கும் ஆளில்லாத நிலையைத்தான் உருவாக்கும்.
அருணோதயா, லக்கி ஸ்ரார், மணிகண்டன் விளையாட்டுக்கழக இளைஞர்களே! இந்த நிலை உங்களுக்கான அவமானம். 10 நாட்கள் நமது ஊரின் திருத்தலத்தில் நடைபெறும் திருவிழாவில் வாகனக்கொம்பிற்கு தோள்கொடுக்கமுடியவில்லையெனில் நீங்கள் வெல்லும் பரிசுகள் பெறுமதியற்றவை. ஒரு திருவிழாவிற்கு ஒரு கழகம் என ஐயனாரைத் தோளில் வைத்துக் கொண்டாடுங்கள்.வருடத்தில் ஒரு கழகத்திற்கு 3 நாட்கள் உங்களால் ஐயனைத் தோளில் சுமந்து வீதிகளில் புழுதி பறக்கவிட முடியாதா?
நீங்கள் எல்லாம் இருக்க தள்ளுவண்டி எதற்கு?
இனிவரும் திருவிழாக்கள் உங்கள் தோள்களில் நடக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
உங்களின் எதிர்காலங்களான ஆலயங்களையும் கொண்டாட்டங்களையும் உங்கள் கைகளில் எடுங்கள் நடத்திக்காட்டுங்கள்.
உங்களால் முடியும்.
No comments:
Post a Comment