2013ம்
ஆண்டு அனலைதீவு மனோன்மணி அம்பாள் அறநெறிப் பாடசாலை நிர்வாகத்தினரால் மனோன்மணி அம்பாள் ஆலய முன்றலில் 1990 ஆண்டு
கடல்கொண்ட உயிர்களின் நினைவாக வழங்கப்பட்ட மரங்களில் ஒன்றான அந்த மாமரம்
செல்வன்.ரவீந்திரன் நிதர்சன் அவர்களின் அக்கறையுடன்கூடிய சிறப்பான பராமரிப்பினால் இன்று இனிப்பான கனிதரும் மரமாக வளர்ந்துள்ளது.
காலத்தையும்
நமது கடமையையும் உணர்ந்து செய்யும் சின்னச்சின்ன தூரப்பார்வை கொண்ட செயல்கள் அதற்கான வெகுமதியை அடுத்த சந்ததிக்கு கொடுத்தே தீரும்.
அனலைதீவு
சதாசிவ மகாவித்தியாலயத்தில் 8A.C சித்திபெற்று கல்வியைத்
தொடரும் செல்வன்.ரவீந்திரன் நிதர்சன்
அவர்களின்
இயற்கைமீதான அக்கறையையும் கனிதரும் மரம் வளர்த்த பண்பையும்
பாராட்டுவோம்.
- அனலைதீவு
கலாசார ஒன்றியம் கனடா.
No comments:
Post a Comment