Saturday, 13 October 2018

ஆசிரியர் தினம்.

 அனலைதீவு கலாசார ஒன்றியம்-கனடா ஆதரவுடன்
அனலைதீவு வடக்கு மாதர் அபிவிருத்திச் சங்கம் நடாத்தும் தரம் 5ற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாலைநேர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான  ஆசிரியர் தின விழா Oct.13.2018ம் திகதி அனலைதீவு வடக்கு பொது மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. அனலைதீவு வடக்கு மாதர் அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள் அனைவரினதும் மாணவர்களின்மீதான அக்கறையுடன்கூடிய பெரு முயற்சியினால் சாத்தியமாக்கப்பட்ட ஆசிரியப்பெருமக்களை கனம்கொள்ளும் இந்நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பித்த ஆசிரியப்பெருமக்கள், பொதுமக்கள் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றி கூறிக்கொள்கிறோம். மாணவர்களின் கல்விப் பாதையில் கூடவே நடந்து சென்று அறிவையும், உலகையும் அறிமுகப்படுத்தி ஒப்பற்ற உழைப்பையும், உயர்வையும் சமூகத்திற்கு வழங்கும் அனலைதீவு மாணவர்களிடையே கடமையாற்றும் ஆசிரியப்பெருந்தகைகள் அனைவருக்கும் நன்றிகலந்த ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.
கலைநிகழ்வுகளில் பங்குகொண்ட மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்கள்.உறவுகள் நினைவுகொள்ளப்பட்டதும், நினைவு மரங்கள் வழங்கப்பட்டதும், பனைவளங்கள் பெருமைப்படுத்தப்பட்டதும், இயற்கை போற்றப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரிய சிறந்த முன்மாதிரியான முயற்சியாக அமைந்துள்ளது வரவேற்பிற்குரியது. பனங்காய்ப்பணியாரம் பனை ஓலைக் குட்டானில்
அழகாக இருந்து நமக்கு நல்ல அறிவையும் புகட்டுகிறது. நமது வளங்களை பாதுகாப்போம்.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்;
        திரு.க.உதயப்பிரகாஷ்
-அனலைதீவு கலாசார ஒன்றியம்-கனடா.




























































































































No comments:

Post a Comment