Saturday, 6 October 2018

நினைவு.



காலம் காலமாக நம் தொட்டிலைத் தாலாட்டும் கடலன்னை முடிந்தவரை முயற்சித்துச் சிலரைக் கரை சேர்த்தாள். முடியாத நிலையில் அறுபத்தியேழு பேரை தனது கருவறைக்குள் சேர்த்துக்கொண்டாள். நாட்டின் அசாதாரண சூழலுக்குள் அகப்பட்டு உயிர்நீத்த அத்தனை உறவுகளுக்காகவும் வருந்தும் நாம் 1990ம் ஆண்டு   இன்றைய தினத்தில்(Oct.06.1990) கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் கடலன்னையின் அடிமடியில் உறங்கிப்போன நமது உறவுகளனைவருக்காகவும் உலகெங்கும் வாழும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக நமது நினைவஞ்சலியைச் செலுத்திக்கொள்ளும் நிகழ்வு Oct 06.2018ம் திகதி அனலைதீவு மேற்குக் கடற்கரையில் அனலைதீவு கலாசார ஒன்றிய செயற்பாட்டுக்குழு . தலைவர்  திரு.. நடராசா, பொருளாளர் திரு.கு.குமாரதேவன்,  திரு.ம.சயந்தன்,திரு..கோகுலராஜ் ஆகியோரின் பெருமுயற்சியினால்  பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
நினைவு தீபம்  ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு மா மரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வு நடந்த இடத்தில்ஆலமரம் ஒன்று நடப்பட்டது.இந்த ஆலமரம் ஒரு பனைமரத்தில் வளர்ந்திருந்தது. இந்த மரத்தை அடையாளம் கண்டு நிலத்தில் நட்டுவளர்க்க உழைத்த திரு.கு.குமாரதேவன் அவர்களுக்கு நன்றி.
நமது ஊறவுகளின் நினைவுகளை தொடர்ந்து சுமக்கும் இந்நிகழ்வினை நடாத்த உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் வலுவான செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்ட 
பொதுமக்களினால் உறவுகளின் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்று இந்த இடத்தில் அமைக்கவேண்டுமென்ற உணர்வுபூர்வமான கோரிக்கை வைக்கப்பட்டது. நிறைவேற ஒத்துழைப்போம். முயல்வோம்.
படங்கள்:திரு..கோகுலராஜ்
திரு..உதயப்பிரகாஷ்
-அனலைதிவு கலாசார ஒன்றியம் கனடா.








































No comments:

Post a Comment