Thursday, 17 January 2019

உதயநிலா.



அனலைதீவு தெற்கு உதயநிலா தாய்மார் கழகத்தினால் உற்பத்தி செய்யப்படும் சத்துமா அறிமுக நிகழ்வு இன்று(Jan.17.2019) இடம்பெற்றது. அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் ஆரம்ப நிலை உதவியோடு அனலைதீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் அவசியமான இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வித்திட்ட அரச அலுவலர்கள் அனைவருக்கும் ஊர்மக்களனைவரினதும் சார்பாக நன்றியுணர்வோடு பாராட்டுத் தெரிவித்துக்கொள்கிறோம். அனலைதீவு தெற்கு உதயநிலா தாய்மார் கழக நிர்வாகத்தினர் மற்றும் அனலைதீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினர் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள். இச்செயற்திட்டம் தொடர்ச்சியாக நல்ல முறையில் நடைபெறவேண்டிய அவசியம் கருதி  அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பு உதவி வழங்குமென்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
- படங்கள்:திரு..உதயப்பிரகாஷ்

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காக போசாக்கு  மிக்க தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும்  இச்சத்துமாவினை மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.
தொடர்புகளுக்கு
உதயநிலா தாய்மார் கழகம்
அனலைதீவு 05
0762138838
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா

























































No comments:

Post a Comment