பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மதிப்பிற்குரிய வைத்திய அதிகாரி திரு.T.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் வைகாசி 11.2019ம் திகதி அனலைதீவிற்கு வருகைதந்த துறைசார் குழுவினர் அனலைதீவு பிரதேச வைத்தியசாலையின் தேவைகள் குறித்து மக்களுடன் கலந்துரையாடி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மதிப்பிற்குரிய வைத்திய அதிகாரி திரு.T.சத்தியமூர்த்தி அவர்களின் பணிப்பின்பேரில் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு புதிதாக வழங்கப்பட்டிருக்கும் அம்புலன்ஸ் வண்டி விரைவில் அனலைதீவை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அவசியமான இந்த நற்பணி நிறைவுபெற உழைத்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மதிப்பிற்குரிய வைத்திய அதிகாரி திரு.T.சத்தியமூர்த்தி அவர்கள், அனலைதீவு பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி மதிப்பிற்குரிய திரு. K.குருபரன் அவர்கள், அனலைதீவு நோயாளர் நலன்புரிச்சங்க நிர்வாகத்தினர், அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் அனலைதீவு செயற்பாட்டுக் குழு நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக மனம் நெகிழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகெங்கும் பரந்துவாழும் அனலைதீவு மக்களின் அருந்துணையோடு மிகுந்த பொருட்செலவில் கட்டிமுடிக்கப்பட்ட அனலைதீவு பிரதேச வைத்தியசாலையின் அதிமுக்கிய தேவைகளிலும், சேவைகளிலும் அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பு தொடர்ந்து தனது பங்களிப்பை உறுதிசெய்துகொள்வதே காலத்தின் கடமையாகும் என்ற தாழ்மையான கருத்தை அனலைதீவு மக்களனைவருடனும் பகிர்ந்கொள்கிறோம்.
படங்கள்:திரு.க.உதயப்பிரகாஷ்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா
படங்கள் மற்றும் பதிவு நன்றி:-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா
No comments:
Post a Comment