Sunday, 6 October 2019

நினைவு நாள்.


 நினைவு நாள்.
oct..06.2019ம் திகதி அனலைதீவு மேற்குக் கரையில் 1990ம் ஆண்டு கடலில் இழந்த நமது உறவுகள் அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் உதவியோடு பொதுமக்களால் நினைவுகொள்ளப்பட்டார்கள். பொதுமக்களுக்கு மாங்கன்றுகளும் பலா மரங்களுமாக நூற்றுக்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.நிகழ்வுக்கு உதவிய பொதுமக்கள், திரு.கு.குமாரதேவன், திரு.க.உதயப்பிரகாஷ் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றி.
காலம் காலமாக நம் தொட்டிலைத் தாலாட்டும் கடலன்னை முடிந்தவரை முயற்சித்துச் சிலரைக் கரை சேர்த்தாள். முடியாத நிலையில் அறுபத்தியேழு பேரை தனது கருவறைக்குள் சேர்த்துக்கொண்டாள். நாட்டின் அசாதாரண சூழலுக்குள் அகப்பட்டு உயிர்நீத்த அத்தனை உறவுகளுக்காகவும் வருந்தும் நாம் 1990ம் ஆண்டு இன்றைய தினத்தில் கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் கடலன்னையின் அடிமடியில் உறங்கிப்போன நமது உறவுகளனைவருக்காகவும் உலகெங்கும் வாழும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக நமது நினைவஞ்சலியைச் செலுத்திக்கொள்வோம்.

-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா
படங்கள் பதிவு நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.



















































No comments:

Post a Comment