கடல்கொண்ட உறவுகளின் நினைவாக 2016ம் ஆண்டு அனலைதீவு ஐயனார் ஆலய அருகாமையில் வடிவமைக்கப்பட்டு இன்று அழகாக காட்சிதரும் பூந்தோட்டம் தற்போது ஐயனார் ஆலய நிர்வாகத்தினரால் பராமரிக்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பாகப் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தரும் நிர்வாகத்தினருக்கு எமது பாராட்டுக்கள்.
காலத்தில் செய்யப்படும் சின்னச் சின்ன முயற்சிகளை காலம் தன் கரங்களில் எடுத்து ஏற்றிச் செல்லும். தவறுகளால் நாம் இழந்து செல்லும் காலம் பெறுமதியானது.இது மரங்களின் மாதம். உங்கள் காணிகளிலோ பொது இடங்களிலோ உங்களால் முடிந்த மரங்களை நட்டு காலத்தின் கையில் கொடுத்துவிடுங்கள். சில வருடங்களில் உங்கள் மனதையும் நமது மண்ணையும் காலம் ஈரப்படுத்தும். நம் முன்னவர்கள் நட்ட மரங்களின் நிழலில் நாம் ஒதுங்குகிறோம். நமது அடுத்த சந்ததியினரின் நிழலுக்காய் நாம் மரங்கள் நடுவோம். ஒத்துழைக்க விரும்புகிறவர்கள் அனலைதீவு கலாசார ஒன்றிய நிர்வாகத்தினருடன் தொடர்புகொண்டு இந்தவருடம் நம்மாலான மரங்களை நடுவதற்கு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
படங்கள்: திரு. உதயப்பிரகாஷ்
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
படங்கள் பதிவு நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
No comments:
Post a Comment