Sunday, 20 September 2020


 
 
 
 
ஒரு மனிதன் காலமானான்.
எருக்கிலை தண்டில வலை நெய்தவன்
மேற்குப்பாறைத் தேகத்தில உயிர் செய்தவன்
மண்ணுக்குள்ள மூச்சை வைச்சு பயிர்செய்தவன்
காலுக்குள்ள கடலைச் சுருட்டி தொழில் செய்தவன்
கருக்கலுக்குள் வெள்ளாப்பை கொட்டிப் பார்த்தவன்
பொருக்கடிச்ச தேகத்தோட வெள்ளி கோர்த்தவன்
மிடுக்கு முறுக்கி மீசைக்குள்ள தொட்டில் ஆட்டுவான்
அடுத்த நொடி பேச்சுக்குள்ள அன்பு காட்டுவான்
கரையொதுங்கும் அலைகளுக்குள் வாழ்வை தேடினான்.
கால அலை மோதியதால் ஆழமாகினான்.
ஊருக்குள்ள உருக்குச் சிலை பாளமாகினாய்
உயரந்தவனே மிதந்து கடல் ஜீவனாகுவாய்.

 

 அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு.நாகன் இராமன் அவர்கள் .
Sept .20.2020ம் திகதி இறைபதமடைந்தார்.அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருடன் துயர்பகிர்வில் நாமும் பங்குகொண்டு அவரின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.

 

No comments:

Post a Comment