வாசிப்பு.
கைவிளக்கின்
திரியெரிந்து புகையாற்றித்
துப்பிய வெளிச்சம்
மெழுகிய திண்ணையில்
தடுக்கிவிழுந்து தடுமாறிப்பின்
கிடுகுத்தட்டியில்
முட்டிமோதி
எல்லா இடமும்
வெளிச்சம் பூச முயற்சித்துத்
தோற்றுப்போய்
இருட்டைக்கொஞ்சம்
தின்றுமுடித்து
என் புத்தகத்தின்மேல் விழுந்து
அப்பியது.
என்னுள்ளிருந்தும்
அகன்றது
இருள்.
-- சிவம்.
Nov. 01.2011.
No comments:
Post a Comment