Tuesday 29 December 2020

பசுமை.

அமரர்களான திரு.ஐயன் கந்தன், திருமதி கந்தன் சீதை,  செல்வி.கந்தன் மாரிமுத்து ஆகியோரின் ஞாபகார்த்தமாக திரு. கந்தன் மகாலிங்கம் அவர்களின் உதவியோடும் இயற்கை ஆர்வமுள்ள அனலை இளைஞர்களின் அக்கறையான உழைப்போடும் Dec.26.2020 ம் திகதி மகாவிஷ்ணு ஆலய சுற்றுப்புறம் மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வேருடன் விருட்சங்கள் நடப்பட்டன.குருவிகளால் விதைக்கப்பட்டு வீரியத்துடன் பிற மரங்களில்  வளர்ந்திருந்த ஆலமரங்கள். அரசமரங்கள் வேருடன் பிரித்தெடுக்கப்பட்டு நடவுசெய்யப்பட்டன. இந்த நற்செயலில்  பங்குகொண்டு உழைத்த திரு.கந்தன் கிருஸ்ணன், திருமதி.கிருஸ்ணன் யுவனாள்,ஆ.றொனாட், சொ.நிதுஷ்சன், யோ.சுரேந்தர், கோ.உதயராஜா,.ந.நந்தபாலன்,.ஜோ.அஜித்குமார்,
றொ.றெஜினோல்ட்,.த.துஜீபன்.,ந.சுஜந்தன்.,சௌ.கோணேஸ்வரன் சௌ.பாலேந்திரா, பா.நிசாந்தன்
த.துஜிபன்ராக்,ச.சௌந்தரராஜன்
க.உதயப்பிரகாஷ் மற்றும் மகாவிஷ்ணு ஆலய திருப்பணி சபையினர், ஆலயக் குருக்கள் மதிற்பிற்குரிய திரு.வெங்கடேச சர்மா அவர்கள் ஆகியாருக்கு . அனலை மக்களனைவரினதும் சார்பாக மனம் நெகிழ்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இயற்கையோடு இணைந்த “பசுமை அனலை” அமைப்பின் நற்செயல்களை மனதாரப் பாராட்டுவதோடு இனிவருங்காலங்களில் அவர்களின் அனைத்து நல் முயற்சிகளுக்கும் நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி நமது அடுத்த சந்ததியினருக்கு நம்மிடம் நம் மூதாதையர் தந்துசென்ற அனைத்தையும் திருப்பிக்கொடுக்க முயல்வோம்.
























 

No comments:

Post a Comment