Friday 18 February 2022


 

மரங்களும் மனிதர்களும்.
ஊருக்கு வந்திருக்கும் மேலான பெரியவர்களே!
இந்த மண்ணிற்கு நீங்கள் வருவதற்கான காரணங்களை வளர்த்து. பூத்து காய்த்து. கனிந்து உங்களுக்காகக் காத்திருப்பவை நமது மண்ணில் 40 தொடக்கம் 60 ஆண்டுகளுக்கு மேலான வயதைத் தாண்டி நமது ஊரின் மூச்சுக்காற்றை, உங்களின் அந்திமகால உயிரை பாசத்தோடும்,, நேசத்தோடும் வருடும் பழமையான மரங்கள்தான்.
இளைய தலைமுறை மரங்களை பல இடர்ப்பாடுகளுக்கும் மத்தியில் வளர்க்க முனையும் நிலையில் வயதில் மூத்தவர்கள் உங்களுக்குச் சொந்தமான பெருமரங்களை தயவுசெய்து வெட்டாதீர்கள்.
நமது முன்னவர்கள் நமக்குத் தந்துசென்ற பெருவிருட்சங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லுங்கள்.
அனலைதீவிலுள்ள எல்லா வேப்ப மரங்களையும், பெருமரங்களையும் பாதுகாக்காத எந்த மரநடுகை முயற்சியும்
பயனற்றவையாகிவிடாமலிருக்க ஊரவர்கள் அனைவரும் பொதுமுயற்சி எடுக்ககேண்டும்.
 
 ஊரில் எல்லா மரங்களின்மீதும் அன்பு காட்டும் பண்பான பெரியவர்கள் அனைவருக்கும் அடுத்த தலைமுறை நன்றியோடு வாழும்..
 
 
உங்கள் வளவு துப்பரவாக்குகிறோம் என்று சொல்லி அடுத்த தலைமுறையின் சுவாசப்பைக்குள் குப்பைகளைக் கொட்டாதீர்கள்.

No comments:

Post a Comment