அனலைதீவு வைத்தியசாலையின் முன்சுற்றுமதில் புனரமைப்பு மற்றும் வெள்ளையடித்தல் முதலான திருத்த வேலைகள் அறநெறிப்பாடசாலை நிர்வாகத்தினூடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தை கனடாவில் வசிக்கும்
திரு.அனுசன் கனகலிங்கம் அவர்கள் தமது தாத்தாவாகிய திரு.வைத்திலிங்கம் கணேசு அவர்களின் ஞாபகார்த்தமாக முழுமையாகப் பொறுப்பேற்று ஊரவர்களின் நலனில் பங்காற்றுகிறார் என்ற மகிழ்வான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடையும் நாம் எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறான ஞாபகார்த்த நற்பணிகளில் மேலும் பல வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் நிறைவேற்ற நாமெல்லோரும் முயற்சிப்போம்.
அறநெறிப்பாடசாலை சார்பாக
திரு.செல்வா வீரகத்தி.
April 3.2012.
No comments:
Post a Comment