Friday, 6 April 2012

ஈரம்.



ஒவ்வொரு
மணற்துளிக்குள்ளும்
ஆயிரமாயிரம் மனிதர்களின்
 நினைவுகளில்
நிழல் போர்த்து
இன்னும் ஈரமாகவே
அடைகாக்கும்
அழகிய முகப்பு.
நம் மூதாதையரின்
முகம் பார்த்து
அவர்மீது நிழல்வார்த்த  
நிழல்வேம்பு
மரவேம்பு
அரசமரம்.
பழைய நினைவுகளின்மேல்
இந்த நிழலை
ஊற்றுங்கள்.
இதமாக நனையும்
இதயம்.
             மு.கு.சிவம்.

No comments:

Post a Comment