அனலைதீவு மனோன்மணி அம்பாள் ஆலயத் திருவிழாவின்போது இடம்பெற்ற கலைநிகழ்வுகளின்போது நமதூர் மாணவச் செல்வங்களின் கலைத்தோற்றம்
. கோபுரத்தினதும்
திருவிழாக்கோலங்களினதும் படங்களுக்கு மத்தியில் இவர்களின் படங்கள் தவறிப்போனமை வருத்தத்திற்கும் தவிர்க்கப்படவேண்டியவையுமாகும்.இத்தவறுக்கான எமது மனவருத்தத்தை இங்கு
பதிவு செய்வதன்மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான
தவறுகளைத் தவிர்க்க முனைகிறோம்.
இக்குழந்தைகளுக்குள் நாம்
பதியமிடுகின்ற கலையுணர்வும், கல்வியும்தான் நம்மால் திடப்பொருட்களைக்கொண்டு கட்டப்படுகின்ற ஞாபகங்களை
எதிர்காலத்தில் குறைந்தபட்சம் பராமரிப்பதற்கான எண்ணங்களையாவது அவர்களுக்குள்
தோற்றுவிக்கமுடியும் என நாம் நம்புகிறோம்.இறைநம்பிக்கையோடு கோவில்களுக்கு வாரிவழங்கும் நாம் மேற்குறிப்பிட்ட கருத்தில்
உடன்படுவோமானால் கல்விப்பணிகளின்மீதும் கவனம் செலுத்துவோம்.
அறநெறிப்பாடசாலை
சார்பாக
திரு.த.நாராயணன்.
July 09.2012
No comments:
Post a Comment